பிகில் ட்ரைலர் குறித்து ட்வீட் செய்த தமிழரின் எதிரி ராஜபக்க்ஷேவின் மகன்..கழுவி ஊற்றிய தமிழகர்கள்..

By Rajkumar · 13/10/2019

தென்னிந்திய திரைப்பட உலகையே கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகர் 'இளைய தளபதி விஜய்'. மேலும்,அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 63 வது படமான "பிகில்" படம் அக்டோபர் 27 ஆம் தேதி திரையரங்குக்கு இன்னும் சில நாட்களில் அதாவது தீபாவளி அன்று வெளிவர உள்ளது என்ற தகவல்கள் சமூக வலைத் தளங்களில் ஜெட் வேகத்தில் பரவி வருகின்றது.பிகில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து உள்ளார்.இவர்களோடு விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், யோகிபாபு ஆகிய பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின் நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது.மேலும், இந்தப் படத்துக்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் இசையமைத்துள்ளார். விஜய் நடிப்பில் வரவிருக்கும் விஜயின் 63 வது படமான 'பிகில்' ரசிகர்களிடையே அதிக ஆர்ப்பாட்டத்தையும், ஆவலையும் தூண்டியுள்ளது.

https://twitter.com/RajapaksaNamal/status/1183063304559722496

இந்த படத்தில் விஜய் அவர்கள் அப்பா மற்றும் மகன் என்று இரு வேடங்களில் நடித்துள்ளார்.இதில் மகனுக்கு "மைக்கேல்" என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பாவின் பெயர் "ராயப்பன்" என மிரட்டலான,அதிரடி பெயரை வைத்து உள்ளார்கள். போஸ்டரில் அப்பாவை பார்க்கும்போது கறிகளை வெட்டும் கசாப்கரன் என்று தெரிய வருகிறது. இந்த படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுத்த படம் ஆகும். மேலும்,இதற்காக விஜய் ரசிகர்கள் 'தளபதி 63' என்ற ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி அதில் விஜய் படம் சம்பந்தமான தகவல்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் பிகில் படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் கண்டு கழிக்கும் ஒரு அற்புதமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .

இதையும் பாருங்க : இந்தி படத்தில் இருந்து வசனத்தை சுட்டுள்ள அட்லீ.. வீடியோவை பகிர்ந்து கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்..

அதனின் கொண்டாட்டமாக நடிகர் விஜய்யின் பிகில் படத்தின் இசை வெளியீடு விழா தனியார் கல்லூரியில் மீரல வைக்கும் அளவிற்கு நடந்து முடிந்தது.தளபதி ரசிகர்கள் மற்றும் மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டிருந்தது பிகில் படத்தின் டிரைலர் தான்.இதனைத்தொடர்ந்து பிகில் படத்தின் டிரைலர் இணையங்களில் வந்த கொஞ்ச நேரத்திலேயே பல மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் பார்த்துள்ளனர்.விஜய் அவர்களின் பிகில் படத்தின் ட்ரைலரை பார்த்துவிட்டு பல பிரபலங்கள் பாராட்டியும், வாழ்த்துகளை தெரிவித்தும் வருகிறார்கள். இந்நிலையில் இலங்கை அரசியல்வாதியும், முன்னாள் பிரதமருமான மகிந்த ராஜபக்சே அவர்களின் மூத்த மகன் நமல் ராஜபக்சே தனது ட்விட்டர் பக்கத்தில் பிகில் படம் ட்ரைலர் குறித்து கூறி உள்ளார்.

மேலும், உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் பிகில் படத்தினை நோக்கி பல எதிர்பார்ப்புடன் உள்ளனர். இதனை தொடர்ந்து பிகில் படத்தின் டிரைலர் சமூக வலைத்தளங்களில் நேற்று வந்த உடன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நமல் ராஜபக்சே கூறியது, இந்த மாதம் கடைசியில் வரும் பிகில் படத்திற்காக நான் ரொம்ப ஆவலாக இருக்கிறேன். மேலும், விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி கிப்ட்டாக பிகில் படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.விஜய் நடிப்பில் வரும் பிகில் படம் தான் இந்த வருடம் தீபாவளிக்கு ரசிகர்களுக்கு மிக பெரிய விருந்தாக இருக்கும் என்று நினைக்கிறன். மேலும், இது தான் விஜய் ரசிகர்களுக்காக கொடுக்கும் ட்ரீட்டு என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

https://twitter.com/zahranc/status/1183105470535520256

https://twitter.com/Barni41749390/status/1183147398790410240

இதனைத்தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிகில் படத்தின் டிரைலரை பதிவிட்டுள்ளார். ஆனால், இந்த பதிவினை கண்ட தமிழகர்கள், நீங்கள் இதற்கு மட்டும் தான் தமிழர்களுக்கு ஆதரவளிப்பீர்களா ? இலங்கையில் நடந்த பிரச்னையின் போது அதுகுறித்து ஒரு ட்வீட் கூட செய்யவில்லை என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இலங்கையில் தமிழர்கள் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்பட்ட போது அதை பற்றி ஒன்றும் வாயை திறக்காத ராஜ பக்ஷேவின் மகன் தற்போது ஒரு திரைப்படத்திற்காக ட்வீட் செய்துள்ளது ரசிகர்களை பெரும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும் விஜய்யின் பிகில் ட்ரைலர் இலங்கை வரை ஒளித்துள்ளதை எண்ணி ரசிகர்கள் ஒரு புறம் மகிழ்ச்சியில் தான் இருந்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full