இந்தி படத்தில் இருந்து வசனத்தை சுட்டுள்ள அட்லீ.. வீடியோவை பகிர்ந்து கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்..

0
9317
Bigil
- Advertisement -

தென்னிந்திய தமிழ் சினிமா திரை உலகத்தை கலக்கிக் கொண்டிருப்பவர் இளைய தளபதி விஜய். மேலும், இவர் நடிப்பில் வர இருக்கும் 63வது படமான பிகில் படத்தின் ட்ரைலர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த ட்ரைலர் வெளியான சில மணி நேரத்திலேயே மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு யூடியூபில் சாதனை படைத்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்திலும்,கொண்டாடத்திலும் உள்ளார்கள். . இந்த படத்தின் ட்ரைலரை பார்த்து விட்டு படம் எப்போது வெளியாகவும் என்று ரசிங்கர்கள் மிகவும் வெறித்தனமாக உள்ளார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த பிகில் படத்தை அட்லி தான் இயக்குகிறார்.இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் அவர்கள் இசை அமைத்து உள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து உள்ளார். மேலும், விவேக், யோகி பாபு, டேனியல், ஆனந்த் ராஜ், இந்துஜா, கதிர் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க பெண்களின் கால்பந்தாட்டத்தை வைத்து எடுக்கப்பட்டதுஎன்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். மேலும்,சமீபத்தில் தான் இந்த படத்திற்கான இசை வெளியி்டு சிறப்பாக முடிவடைந்தது.

இதையும் பாருங்க : அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில கமல் குறித்தே சர்ச்சையான ட்வீட் செய்த மீரா..

- Advertisement -

அது மட்டும் இல்லாமல் இயக்குனர் அட்லீ இதுவரை தளபதி விஜயை வைத்து தெறி மெர்சல் என்று 2 படங்களை இயக்கியுள்ளார். இதனை தொடர்ந்து அட்லி இயக்கிய எல்லா படத்திலும் ஒரு சில காட்சிகள் ஆவது காப்பி அடிக்கப்பட்டு இருக்கும் என்று பல விமர்சனங்கள் இணையங்களில் வந்து உள்ளன. அவர் இயக்கிய ராஜா ராணி – மௌன ராகம் என்றும், தெறி- சத்ரியன் என்றும், மெர்சல் – அபூர்வ சகோதரர்கள் என்றும் அட்லீ இயக்கிய அனைத்து படங்களும் காப்பி தான் என்று விமர்சனம் எழுந்ததும் நாம் அறிவோம். இந்நிலையில் பிகில் படத்தின் ட்ரைலர் மூலம் இந்த படமும் காப்பி தான் என்று ட்ரோல்கள் வர ஆரம்பித்துவிட்டது. பிகில் படத்தின் ட்ரைலரில் விஜய் மற்றும் இந்துஜா இடையேயான வசனம் ஏற்கனவே ஹிந்தியில் ஷாருக்கான் நடித்த சக்தே இந்தியா படத்தில் பேசப்பட்ட வசனம் என்று சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று படு வைரலாக பரவி வருகிறது .இதனால் ரசிகர்கள் இந்த படத்திலும் காப்பியா?என்ற மன வேதனையில் உள்ளார்கள்.

மேலும்,அட்லீ படம் குறித்து இணையங்களில் விமர்சனம் செய்து வருகிறார்கள் நெடிசன் கள். இதனைத்தொடர்ந்து விஜய் வைத்து அட்லீ இயக்கிய தெறி, மெர்சல் படங்களை குறித்து கூறிவருகின்றனர் ரசிகர்கள். ஏற்கனவே அட்லீ அவர்கள் விஜயின் மெர்சல் படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த ஆபூர்வ சகோதரர்கள் படத்திலிருந்து எடுக்கப்பட்டது என்று ஒரு முறை பிரபலம் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறி இருந்தார்.அது போல தற்போது விஜய்யின் பிகில் படமும் காப்பி எடுக்கப்பட்டது என்று கூறுகிறார்கள். அதுமட்டுமில்லைங்க இந்த படம் ஆரம்பித்த போதே இந்த படம் தன்னுடைய கதை என்று இயக்குனர் ஒருவர் சினிமா சங்கத்தில் புகார் ஒன்றையும் அளித்திருந்தார்.அந்த பஞ்சாயத்தை எப்படியோ பூசி மொழுகிவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

-விளம்பரம்-
Advertisement