திரிஷாவின் முன்னாள் காதலனோடு டேட்டிங் செய்துள்ள பிக் பாஸ் நடிகை – இவரால் தான் திருமணம் நின்றதா ? அவரே கொடுத்த விளக்கம்.

0
1131
- Advertisement -

திரிஷாவின் முன்னாள் காதலன் உடன் நடிகை பிந்து மாதவி டேட்டிங் சென்ற புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் திரிஷா. இவர் ஆரம்பத்தில் படங்களில் துணை கதாபாத்திரங்களில் தான் நடித்து இருந்தார். அதன் பின் இவர் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும், இவர் கமல், ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த ராங்கி என்ற திரைப்படத்தில் திரிஷா நடித்திருந்தார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. அதன் பின் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகி இருந்த பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் திரிஷா நடித்து இருந்தார்.

- Advertisement -

திரிஷா திரைப்பயணம்:

இந்த படம் மிக பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்க்கப்பட்டது மட்டும் இல்லாமல் வசூலிலும் சாதனை செய்து இருக்கிறது. தற்போது திரிஷா அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத், கௌதம் மேனன், அர்ஜூன் மற்றும் மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

திரிஷா திருமணம்;

இது ஒரு பக்கம் இருக்க, திரிஷா அவர்கள் தொழிலதிபர் வருண் மணியன் என்பவரை காதலித்து இருந்தார். இவர்கள் இருவருக்கும் 2015 ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது இது அனைவரும் அறிந்து ஒன்று. ஆனால், ஏதோ சில காரணங்கள் இவருடைய திருமணம் நின்று விட்டது. இது குறித்து சோசியல் மீடியாவில் பல கேள்விகள் எழுந்தது. அதற்கு திரிசாவின் அம்மாவும் விளக்கம் கொடுத்திருந்தார். இந்நிலையில் தற்போது வருண்மணியுடன் நடிகை பிந்து மாதவி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

-விளம்பரம்-

பிந்து மாதவி காதலிக்கும் நபர்:

இது குறித்து இருவரும் காதலிக்கிறார்களா? என்று பலரும் கேட்டு வருகிறார்கள். இந்நிலையில் இது குறித்து பிந்து மாதவி பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதாவது, தற்போது பிந்து மாதவி நியூசன்ஸ் என்ற வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். இது ஒரு தெலுங்கு வெப்சீரிஸ். 20 வருடங்களுக்கு முன்பு ஆந்திராவின் மதன பள்ளியில் நடந்த க்ரைம், அரசியல், பத்திரிக்கை துறை கலந்த தொடர்பாக உருவாக்கப்பட்ட கதை. இந்த படம் மே 12ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

பிந்து மாதவி கொடுத்த விளக்கம்:

இது தொடர்பாக இவர் ஹைதராபாத்தில் பத்திரிகையாளர் சந்தித்து இருக்கிறார். அப்போது அவரிடம் வருண் மணியன் காதல் குறித்து கேட்டதற்கு அவர், அது உண்மைதான். ஆனால், இரண்டும் வெவ்வேறு காலத்தில் நடந்தது. ஒரே சமயத்தில் நடந்தது அல்ல. பின் அங்கிருந்த ஒருவர், திரிஷா பிரிந்த பிறகு நீங்கள் டேட்டிங் செய்தீர்களா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு பிந்து மாதவி, ஆமாம் என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் பிந்து மாதவி தொழிலதிபர் வருண் மணியனை காதலிப்பது உறுதியாகி இருக்கிறது.

Advertisement