இந்த ஜோக்கர் தான் 5ரூபாய்க்கு மருத்துவம் பாக்க சொன்னது – விஜய்யை திட்டிய மருத்துவர், ஆதரவாக Bjp பிரபலம் போட்ட ட்வீட்.

0
9762
vijay
- Advertisement -

சொகுசு காருக்கு நுழைவு வரி கட்டவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் விஜய்க்கு நேற்று, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த சம்பவம் தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி விஜய் பல கோடிகளில் சம்பளம் வாங்கக் கூடியவர். தற்போது வரை 64 படங்கள் நடித்துள்ள அவருக்கு பல நூறு கோடிகளில் சொத்து இருக்கலாம் என யூகிக்கமுடிகிறது.பிகில் படத்திற்கு 50 கோடி சம்பளம் வாங்கிய விஜய், இறுதியாக வெளியான மாஸ்டர் படத்திற்கு 80 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றார். தற்போது நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்திற்கு இவரது சம்பளம் 100 கோடி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் இருக்கும் பல்வேறு நடிகர் நடிகைகள் சொகுசு கார்களை தான் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலான பிரபலங்கள் Audi, Bmw என்று சொகுசு கார்களை பயன்படுத்துகின்றனர். ஆனால், தமிழ் சினிமாவில் ரோல்ஸ் ராய்ஸ் கார் இரண்டே நபர்களிடம் தான் இருக்கிறது. அதில் விஜய்யும் ஒருவர். 2012ல் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரை நடிகர் விஜய் இறக்குமதி செய்து வாங்கியிருந்தார்.

- Advertisement -

அந்த காருக்கு நுழைவு வரி செலுத்தாததோடு, வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் அவர் பதிவு செய்யவில்லை. இந்த நிலையில், அதனால் நுழைவு வரி விதிக்க தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் விசாரணை சென்னை உயர் நீதி மன்றத்தில் வந்த போது, மூக நீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது. நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும்.

ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது. வரி என்பது நன்கொடையல்ல, கட்டாய பங்களிப்பு, வரி ஏய்ப்பு என்பது தேச துரோகத்துக்கு சமம் என்று என்று கூறியுள்ளனர். மேலும், நடிகர் விஜய்க்கு 1,00,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சமூக வலைத்தளத்தில் வரிகட்டுங்க_விஜய் ட்ரெண்டிங்கில் வந்ததோடு விஜய்யை பலரும் கேலி செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் மெர்சல் படத்தில் விஜய் 5 ரூபாய் டாக்டராக நடித்து இருந்ததை கேலி செய்து மருத்துவர் ஒருவர் பதிவிட்டுள்ளார். அதில், இந்த ஜோக்கர் தான் நோயாளிகளிடம் மருத்துவர்கள் ஐந்து ரூபாய் வாங்க வேண்டும் என்று சொன்னவர். ஒரு நாளைக்கு 100 நோயாளிகளை பார்த்தால் கூட ஒரு நாளைக்கு 500 ரூபாய், மாதத்திற்கு 12,500 ரூபாய். மருத்துவர்கள் குடும்பம் வீதியில் பிச்சை எடுக்க வேண்டுமா என்ன ?

ஏன் இவர் படத்திற்கு 5000 ரூபாய் சம்பளம் பெற்று தன்னுடைய படத்தின் டிக்கெட்டை ஐந்து ரூபாய்க்கு கொடுக்கக்கூடாது என்று பதிவிட்டிருந்தார்.இந்த பதிவை ஸ்க்ரீன் ஷாட் எடுத்த பகிர்ந்த பா ஜ கவின் முன்னாள் தேசிய செயலாளர் கல்யாண், வாழ்க்கையில் கருத்து சொல்லலாம் ஆனா சொல்லுவதற்கு முன்னாடி நாம அதுக்கு உண்மையா இருக்கணும் விஜய். அஞ்சு ரூபாய் டாக்டரா இருக்கலாம்னு சொல்லிட்டு இப்படி நாட்டுக்கு, அங்கிருந்து மக்களுக்கு செல்ல வேண்டிய பணத்தை அமுக்குவது சரியா தம்பி??

Advertisement