பூஜை அறை முன்பு செய்த கேவலமான செயல், வீடியோ வெளியிட்ட மதன் – வீடியோ வைரலானதால் கே டி எடுத்த அதிரடி முடிவு.

0
3705
- Advertisement -

தமிழ்நாடு பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் கே.டி. ராகவனின் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான சர்ச்சை வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து பாஜக மாநில பொதுச்செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக கே.டி.ராகவன் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பாஜகவில் இணைந்தார் ஊடகவியலாளர் மதன் தன்னுடைய மதன் டைரி என்ற யூடுப் பக்கத்தில் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் ‘K.T ராகவன் என்கிற காம ராகவன்’ என்று தலைப்பை போட்டு இருந்தார்.

-விளம்பரம்-
https://www.youtube.com/watch?v=vTWayYsaPw4&t=37s

அந்த வீடியோவில் பாஜகவில் உள்ள சில தலைவர்கள் பெண்களிடம் அத்து மீறி நடக்கின்றனர். பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுக்கின்றனர். அதற்காக சில இடங்களையும் சென்னையில் வைத்துள்ளனர். 15 தலைவர்கள் இதுபோன்று செயலில் ஈடுபடும் வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் உள்ளன. பாஜக மாநில பொறுப்பில் உள்ள கே.டி. ராகவன், ஒரு பெண் நிர்வாகியிடம் எப்படி நடந்துகொள்கிறார் என்று  பாருங்கள் என்று கூறி சில ஷாக்கிங் ஆதாரங்களை காண்பித்துள்ளார் மதன்.

இதையும் பாருங்க : இன்று பிறந்தநாளை கொண்டாடும் மகள் – தனது இரு மகள்களுடன் இமான் பகிர்ந்து குயூட் புகைப்படம்.

- Advertisement -

அதில், கே.டி. ராகவன் பெண் நிர்வாகியிடம் வீடியோ காலில் பேசிக்கொண்டே, விவரிக்க முடியாத ஒரு தவறான செயலில் ஈடுபடும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவ அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கே.டி.ராகவன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  மேலும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அவர் சட்டப்படி சந்திப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள ராகவன், தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும்…எனனை சார்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும்…நான்30 வருடமாக எந்த ஓரு பிரதி பலனும் இன்றி பணியாற்றி வருகிறேன்..இன்று காலை சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி ஒரு வீடியோ வெளி வந்ததை அறிந்தேன்.

-விளம்பரம்-

என்னையும் என்கட்சியையும் களங்கபடுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இன்று மரியாதைக்குரிய மாநிலத்தலைவர் திரு.@annamalai_k அவர்களை சந்தித்து ஆலோசனை செய்தேன். நான் என்னுடைய கட்சி பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்ட படி சந்திப்பேன். தர்மம் வெல்லும் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement