'சிறிய நடிகர், பெரிய மனசு' - பிளாக் பாண்டி செய்த உதவிக்கு நன்றி தெரிவித்து கடிதம் போட்ட இலங்கை அமைச்சர்.

By Ajju · 27/6/2022

இப்படி ஒரு நிலையில் பிளாக் பாண்டிக்கு நன்றி தெரிவித்து பாராட்டி இலங்கை அமைச்சர் பதில் கடிதம் அனுப்பி இருக்கிறார். தமிழ் சினிமாவில் விவேக் வடிவேலு போன்ற பல்வேறு நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டவர் பிளாக் பாண்டி இதை தொடர்ந்து கடந்த 2010 ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான 'அங்காடி தெரு' படத்தின் மூலம் பெரும் பிரபலமடைந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் பிளாக் பாண்டி. சினிமாவில் காமெடியனாக இருக்கும் இவர் நிஜத்தில் மக்களுக்கு பல உதவிகளை செய்து வரும் ஒரு ஹீரோவாக தான் இருந்து வருகிறார். இவர் உதவும் மனிதம் என்ற அமைப்பை உருவாக்கி கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக கஷ்டப்படும் பலருக்கும் சத்தமில்லாமல் உதவி செய்துவருகிறார். இவரது அமைப்புக்கும் செயல்பாடுகளுக்கும் உறுதுணையாக இருந்து கை கொடுத்து வருகிறார் இயக்குனர் சமுத்திரகனி.

இதையும் பாருங்க : சொந்த மச்சானை வைத்து இது நாள் வரை ஏன் படம் இயக்கவில்லை - முதன் முறையாக சொன்ன ஹரி.

உதவும் மனிதம் அமைப்பு :

உதவும் மனிதம் அமைப்பின் மூலம் சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கு அவர்களைத் தேடிச் சென்று உணவளித்து வருகிறார். அத்துடன் படிப்பு செலவு, மருத்துவ செலவு, இறுதிச் சடங்கிற்குகூட வசதி இல்லாமல் கஷ்டப்படும் பல குடும்பங்களுக்கு உதவி செய்து வருகிறார். ஆனால், இவர் இதுவரை அதனை பெரிதாக விளம்பரப்படுத்தியது கிடையாது. இப்படி ஒரு நிலையில் இலங்கைக்கு தன் அமைப்பின் மூலம் உதவ முன்வந்து இருக்கிறார் பிளாக் பாண்டி.

இலங்கை மக்களுக்கு உதவ முன்வந்த பிளாக் பாண்டி :

இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. நாட்டில் நிலவும் கடும் பொருளாதார, அரசியல் நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டு, தொழில் தேடி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு சுற்றுலா விசாவில் சென்ற இளைஞர், யுவதிகள் பலர் தொழில் வாய்ப்பின்றி அனாதரவான நிலைமையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் விலைவாசி உயர்வால் மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பதை அறிந்து இலங்கை மக்களுக்கு நேரடியாக ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க அனுமதி கேட்டு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். 

அமைச்சரின் பதில் கடிதம் :

இதை குறிப்பிட்டு இலங்கை அமைச்சருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி இருக்கிறார். பிளாக் பாண்டியின் கடிதத்திற்கு நன்றி தெரிவித்து பதில் கடிதம் எழுதி இருக்கும் இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் தமிழக மக்களிடமிருந்து அத்தியாவசிய பொருட்களை சேகரித்து நீங்களாகவே எமது மக்களுக்கு அனுப்ப முன்வந்திருக்கும் உங்கள் பணி ஈழத்தமிழ் மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் இடையிலான தொப்புள் கொடி உறவுக்கும், தொன்மைக்குடி உணர்வுக்கும் மறுபடியும் உயிர் கொடுத்திருக்கிறது.

கப்பலை அனுப்புவதாக உறுதி :

நீங்களே குறிப்பிட்டது போல், வெறும் வாய்ச் சொல்லால் மட்டுமன்றி செயலாலும் இந்தியா எமது மக்களை நேசிக்கின்றது என்பதை உங்கள் 'உதவும் மனிதம்' வெளிப்படுத்தியுள்ளது. உங்கள் மனிதாபிமான உதவிப் பொருட்களை எமது கப்பல் சேவை மூலம்கொண்டு வர நான் ஆவன செய்கிறேன். ஆகவே, நம்பிக்கையோடு உங்கள் பணிகளை ஆரம்பிக்கலாம். இது குறித்து ஈழத்தமிழ் மக்களின் சார்பாகவும், இலங்கை அரசு சார்பாகவும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். நன்றி என்று குறிப்பிட்டு உள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full