சொந்த மச்சானை வைத்து இது நாள் வரை ஏன் படம் இயக்கவில்லை – முதன் முறையாக சொன்ன ஹரி.

0
525
hari
- Advertisement -

அருண் விஜய்யை வைத்து படம் பண்ணாததற்கான காரணத்தை முதன் முதலாக மனம் திறந்து இயக்குனர் ஹரி அளித்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் அருண் விஜய். இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அருண் விஜய் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் சினிமா துறையில் இருந்து வருகிறார். இருந்தாலும் பல வருடங்களாக இவர் ஹிட் படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

ஆனால், அஜித்துடன் இவர் நடித்த “என்னை அறிந்தால்” படத்தில் இவரது நடிப்பு ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது. அதற்கு பின் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘செக்க செவந்த வானம்’ படத்திலும் இவரின் அசத்தலான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருந்தார். அதற்கு பின் இவர் ஹீரோவாக மட்டும் இல்லாமல் வில்லனாகவும் மிரட்டி இருக்கிறார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் ஓ மை டாக்.

இதையும் பாருங்க : இந்த முறையும் தகுதியானவர் வெற்றி பெறவில்லை – உண்மையான வெற்றியாளர் இவர் தான் – சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 முடிவால் ரசிகர்கள் அதிருப்தி.

- Advertisement -

யானை படம்:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் யானை. இயக்குனர் ஹரி இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். இவர்களுடன் சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், கருடா ராம், புகழ், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி, ஐஸ்வர்யா, போஸ் வெங்கட், ஜெயபாலன் பிரகாஷ்ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.

படத்தில் பணியாற்றிய கலைஞர்கள்:

ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்து இருக்கிறது. மேலும், நடிகர் அருண் விஜய் இதுவரை ஏற்றிராத வேடத்தில் இந்த படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் ஜூலை 1-ம் தேதி வெளியாக உள்ளது. கிராமம் மற்றும் நகர பின்னணியில் தன் வழக்கமான விறுவிறுப்பான திரைக்கதையுடன் இயக்குநர் ஹரி அட்டகாசமாக இப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்நிலையில் இயக்குனர் ஹரி அவர்கள் பிரபல சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருந்தார்.

-விளம்பரம்-

இயக்குனர் ஹரி அளித்த பேட்டி:

அப்போது அவரிடம் 15 வருடத்திற்கு முன்பு நீங்கள் இருவரும் கை கோர்த்திருக்கலாமே? என்று கேட்டகப்பட்டது. அதற்கு ஹரி கூறியிருந்தது, என்னிடம் இதே கேள்வியை நிறைய பேர் கேட்பார்கள். அவர்களுக்கும் இந்த உண்மை இப்போ தான் புரிய வந்திருக்கும். நான் ஒரு முழு நேர கிரியேட்டர் இல்லை. நான் ஒரு செமி கிரியேட்டர் . ஒரு கமர்சியலா ஒரு வேலை பார்ப்பது போல நான் பாலா சாரோ, அமீர் சாரோ கிடையாது. யாரை வேணாலும் ஒரு ஆளுமையான படத்தை எடுக்க என்னால் முடியாது. ஆனால், அருண் விஜய் ஆகவே நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தன்னை தானே நிறுத்திக் கொள்ளும் போது தான் அவரை வைத்து படம் பண்ணும் அமைப்பே வருகிறது.

அருண் விஜய் குறித்து ஹரி சொன்னது:

அது அமையும் போது நல்ல தயாரிப்பாளர் அமைகிறார். ஒரு காலேஜ் அட்மிஷனுக்கு போனேன். ஒரு விஐபியை சந்தித்தபோது அவர் சொன்ன விஷயம், ரெகமெண்டேஷன் மூலம் மகனுக்கு சீட் கேட்பதைவிட அவனாகவே அந்த சீட்டை பெறும் போது அவன் இன்னும் உறுதியாகவும் தகுதியாகவும் நினைப்பான். அதுக்கு முதலில் வழிவிட வேண்டும். அவனுக்காக கிடைக்கும் ஒன்றை நீங்கள் ஏன் தடுக்கிறீர்கள்? அவனுக்கு அந்த சீட் கிடைத்தால் கல்லூரி காலம் முழுவதும் தன்னம்பிக்கையுடன் இருப்பான் என்று சொன்னார். அவர் அப்போது சொன்னது சூப்பர் வார்த்தைகள். அது மாதிரிதான் என்று கூறியிருந்தார்.

Advertisement