இலங்கை மக்களுக்கு உதவிய பிளாக் பாண்டியிடம் வருமான வரித்துறை சரா மாறியாக கேள்வி கேட்டிருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் விவேக், வடிவேலு போன்ற பல்வேறு நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தவர் பிளாக் பாண்டி. அதன் பின்னர் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டார். இதை தொடர்ந்து கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம் அங்காடித் தெரு.

இந்த படத்தின் மூலம் மக்கள் பிரபலமானவர் நடிகர் பிளாக் பாண்டி. அங்காடித்தெரு படத்திற்கு பிறகு பிளாக் பாண்டி அவர்கள் பல படங்களில் தன்னுடைய நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி இருந்தார். இதனால் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதுமட்டுமில்லாமல் இவர் மற்றவர்களுக்கு பல நற்பணிகளை செய்து வருகிறார். இவர் உதவும் மனிதம் என்ற அமைப்பை உருவாக்கி கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக கஷ்டப்படும் பலருக்கும் சத்தமில்லாமல் உதவி செய்து வருகிறார். இந்த அமைப்பின் மூலம் பலருக்கு மருத்துவ உதவி, கல்வி உதவி, ரத்ததானம் ஆகியவற்றை செய்து வருகிறார்.

Advertisement

இலங்கை மக்களுக்கு உதவிய பாண்டி:

சமீபத்தில் கூட இலங்கையில் விலைவாசி உயர்வால் மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பதை அறிந்து இலங்கை மக்களுக்கு நேரடியாக ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க அனுமதி கேட்டு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார் பாண்டி. இதனை அடுத்து சில தினங்களுக்கு முன்பு இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட கிராமபுற மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு மளிகை சாமான்களுடன் சில குடும்பங்களுக்கு பண உதவியும் பிளாக் பாண்டி செய்திருந்தார். ஆனால், உதவி செய்ததற்கு காவல்துறை மற்றும் வருமானத்துறையினர் பிளாக் பாண்டியிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு எழுப்பி இருக்கிறார்கள். இந்நிலையில் இது குறித்து பிளாக் பாண்டி நண்பர்களிடம் விசாரித்த போது, நாடு விட்டு நாடு போய் செய்கிற உதவிகளை எல்லாம் நேரடியாக போய் செய்ய வேண்டாம் என்று சொல்லிடுங்க.

பிளாக் பாண்டி நண்பர்கள் சொன்னது:

அது தேவையில்லாத சிக்கலை வரவழைக்கும். இத்தனைக்கும் பாண்டி எல்லாவற்றையும் முறையாகவே செய்தார். இலங்கை மக்களுக்கு உதவ அனுமதிக்க வேண்டும் என தலைமை செயலாளருக்கும் கடிதம் எழுதினார். தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் இருந்து அந்த கடிதம் பொதுத் துறைச் செயலாளருக்கு அனுப்பப்பட்டது. அங்கு போனால் நீங்க மத்திய அரசு கிட்ட தான் அனுமதி வாங்கணும் என்று சொன்னார்கள். மத்திய அரசு தரப்பில் விசாரித்தால் இதற்கு அனுமதி எல்லாம் தேவையில்லை உங்கள் அமைப்பின் மூலமாக செய்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்கள். பல முயற்சிகளுக்கு பிறகு தான் இலங்கை மக்களுக்கு பாண்டி உதவிகளை செய்துவிட்டு வந்தார்.

Advertisement

பிளாக் பாண்டி சொன்னது:

ஆனால், தற்போது யாரை கேட்டு போய் வந்தீர்கள்? என்று போலீசும், இனிமே இந்த மாதிரி எல்லாம் நடக்கக்கூடாது என்று எழுதிக் கொடுங்க என்று வருமானவரித்துறையும் சொல்வது அவரை ரொம்பவே வருத்தப்பட வைத்திருக்கிறது என்று கூறுகின்றார்கள். இதனை அடுத்து பாண்டியிடம் கேட்டபோது, வருமான வரித்துறையில் இருந்து உங்கள் டிரஸ்டுக்கு தரப்பட்ட 80ஜி வருமான வரி செலவையை ஏன் ரத்து செய்யக்கூடாது? என்று கேட்டார்கள். இது தொடர்பாக வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருமானவரித்துறைக்கு உரிய விளக்கம் தரலாம் என்று இருக்கிறேன். நான் செய்யப் போனது மனிதாபிமான அடிப்படையில் தான். இவ்வளவு சட்டப் பிரச்சனைகள் இருக்கும் என்று எனக்கு தெரியாது என்று கூறியிருந்தார்கள்.

Advertisement

வருமானவரித்துறை அதிகாரிகள் சொன்னது:

பிறகு வருமானவரித்துறை அதிகாரிகள் சிலரிடம் விசாரித்த போது, அறக்கட்டளை பதிவு செய்ய போதே மக்கள்கிட்ட இருந்து பணம் வசூலித்தால் அதை எந்த நோக்கத்துக்காக பயன்படுத்த போகிறோம் என்று சொல்லணும். அந்த நோக்கத்துக்காக மட்டுமே பணத்தை செலவிடனும். அதை மீறினால் வருமானவரி சலுகை தருவது சிக்கல் வரும். அதே போல் நம்ம நாட்டு பணம் வெளிநாட்டுக்கு போகும் போது அந்த இடத்திலேயே சில வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கிறது. அதை நிச்சயம் கடைபிடிக்கணும் என்று கூறியிருந்தார்கள். இப்படி நல்லது செய்ய போய் சிக்கலில் பிளாக் பாண்டி மாட்டியிருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement