பெண்களின் மார்பகத்தை காமவெறியுடன் பார்ப்பவன் கண்ணிற்க்கு தான் இதில் நடிக்க தோணும் – அஜித் ரசிகர்களுக்கு மாறன் கொடுத்த பதிலடி.

0
792
maaran
- Advertisement -

சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர்தான் ‘ப்ளூ சட்டை மாறன்’ இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் உள்பட யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார். இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் கடந்த 24 ஆம் தேதி வெளியான அஜித்தின் ‘வலிமை’ படத்தை விமர்சனம் செய்து இருக்கிறார். நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருக்கிறார் இதையும் போனிகபூரே தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து உள்ளார் மற்றும் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

- Advertisement -

சுமாரான விமர்சனம் பெரும் வலிமை :

இந்த படத்தில் முழுக்க முழுக்க ஆக்ஷன், பைக் ரேஸ் போன்ற காட்சிகள் அதிகமாக இடம் பெற்றிருக்கிறது. மேலும், இந்த படம் ரசிகர்களின் 3 வருட காத்திருப்பை ஓரளவிற்கு பூர்த்தி செய்து இருந்தாலும் ஜென்ரல் ஆடியன்ஸை முழுவதுமாக பூர்த்தி செய்யவில்லை. இந்த படம் வெளியானதை தொடர்ந்து பாண்டா பிரஷாந்த், சினிமா பையன் அபிஷேக் என்று பலர் விமர்சனம் செய்தனர். மேலும், பெரும்பாலான விமர்சகர்கள் இந்த படத்திற்கு சுமார் என்ற விமர்சனத்தையே கொடுத்து இருக்கின்றனர்.

This image has an empty alt attribute; its file name is 2-20-670x1024.jpg

ப்ளூ சட்டையின் வலிமை விமர்சனம் :

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர் வலிமை படத்தை விமர்சனம் செய்துஇருந்தார். ஆனால், மற்ற விமர்சகர்களை விட இவரது விமர்சனம் தான் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. வலிமை படத்தை கழுவி ஊற்றியுள்ளதோடு மட்டுமல்லாமல், அஜித்திற்கு மூஞ்சில் தொப்பை இருக்கு. படத்தை தயாரித்த போனி கபூர் தான் ஒரு சேட் என்றால் அஜித் பஜன் லால் சேட்டு மாதிரி கொழுக் முழுக்னு இருக்கார், டான்ஸ் ஆடவே கஷ்டப்படுறார் என்று அஜித்தையும் கேலி செய்துள்ளார்.

-விளம்பரம்-

மீண்டும் மீண்டும் வலிமை படத்தை கலாய்க்கும் மாறன் :

இவரது விமர்சனத்தை விட அஜித்தை உருவக் கேலி செய்து இருப்பதை குறிப்பிட்டு அஜித் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தில் திட்டி தீர்த்து வருகின்றனர். மேலும், விமர்சனம் என்ற பெயரில் Body Shaming செய்கிறார் என்று பலரும் இவரை விமர்சித்து வரும் நிலையில். அஜித்தின் ரெட் படத்தில் இடம்பெற்ற ஒல்லி குச்சி உடம்பு காரி பாடலின் வரிகளை ஒப்பிட்டு பதிவு ஒன்றை போட்டுள்ளார் மாறன்.

Image

அஜித் பாடலை உதாரணம் சொன்ன மாறன் :

ரெட் படத்தில் வரும் இந்தப் பாடலில் ஸ்லிம்மாக இருக்கும் கதாநாயகியைப் பார்த்து அஜித் பாடுவது என்ன ரகம் உருவத்தை கேலி செய்யும் வரிகள் கொண்ட பாடலை பாடிய போது நீங்கள் எங்கே சென்றீர்கள் பெண்களின் மார்பகத்தை காமவெறியுடன் பார்ப்பவன் கண்ணணிற்க்கு மட்டுமே இப்படி எழுத தோன்றும் அதில் நடிக்க தோன்றும் இது வெறும் கற்பனை பாடல் அல்ல ஆணாதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடு. ஆகவே உருவ கேலி படமெடுக்கும் வெண்ணெய்கள் திராணி இருந்தால் இப்படி பச்சயாக பாடல் எழுதுவோர் மற்றும் அதில் நடிப்போரை கண்டியுங்கள். இல்லாவிட்டால் மூடிக்கொண்டு இருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement