சிவகார்த்திகேயன் இரட்டை வேடம் போடுகிறார் என்று ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டு இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பு ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பார் சிவகார்த்திகேயன். இவர் ஹீரோயிசத்திற்கு மட்டுமில்லை அவரது நகைச்சுவை திறனுக்கும் என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தற்போது தமிழ் சினிமா உலகில் கோடிகளில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக சிவகார்த்திகேயன் கலக்கிக் கொண்டிருக்கிறார். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
இவர் நடிகராக மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, பாடலாசிரியர், தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து இருந்த டாக்டர், டான் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக பிரின்ஸ் படம் தான் வெளிவந்தது. இந்த படத்தில் மரியா, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை.
மாவீரன் படம்:
இதனை அடுத்து தற்போது சிவா அவர்கள் மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளிவர இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் வரும் ஜூலை மாதம் 14ஆம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கட்டிருந்தது.
SK வின் இரட்டை வேடம்:
— Blue Sattai Maran (@tamiltalkies) July 11, 2023
Mr.Local Press Meet இல் Press/Media வினரை கைத்தட்ட சொன்னது தவறு என ரோபோவிற்கு SK அன்பு எச்சரிக்கை விடுத்தார். ஆனால் Maaveeran Press Meet இல் அதே செயலை மிஷ்கின் செய்தபோது அமைதி காத்தார்.
Why did not you apologize to the press and warn Mysskin?
Proof. pic.twitter.com/QMY47oHKDa
படம் குறித்த தகவல்:
மேலும், சிவகார்த்திகேயன் பாடிய வண்ணாரப்பேட்டை பாடல் சோசியல் மீடியாவில் வெளியாகி பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகி இருக்கிறது. கடந்த வாரம் தான் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் குறித்து ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டு இருக்கும் ட்வீட் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, மிஸ்டர் லோக்கல் படத்தின் பிரஸ்மீட்டின் போது ரோபோ சங்கர் அவர்கள், படத்தை பார்த்துவிட்டு எதற்கு இவ்வளவு அமைதியாக இருக்கிறீர்கள்.
நீங்கள் உங்கள் குடும்பத்தினரும் போய் பாத்தாலும் இப்படித்தான் இருப்பீர்களா? என்று பத்திரிகையாளர்களை கேட்டிருந்தார். அதற்கு சிவகார்த்திகேயன், ஏற்கனவே ரோபோ சங்கர் அண்ணனிடம் இவர்கள் ரசிகர்கள் இல்லை, பத்திரிகையாளர்கள் என்று சொன்னேன். திரும்பவும் இவர் மேடையில் வந்து இந்த மாதிரி கேட்டிருப்பது ஏன் என்று எனக்கு தெரியவில்லை. அவர்கள் வேலையை தான் செய்வார்கள். அவர்கள் ஒரு நாளைக்கு ஒரு படம் பார்த்தால் சிரிக்கலாம், கைதட்டலாம். அவர்களுக்கு இதே தான் தொழில். ஒரு நாளைக்கு 5 படம் பார்க்கிறார்கள் என்று ரோபோ சங்கரை கிண்டல் செய்து பேசி இருந்தார்.
தற்போது மாவீரன் படத்தின் பிரஸ்மீட்டில் மிஸ்கின் அவர்கள் சிவகார்த்திகேயனுக்கு ஒரு கைதட்டல் கொடுங்கள் என்று கூறுகிறார்கள். அப்போது பத்திரிகையாளர்கள் மெதுவாக தட்டுகிறார்கள். உடனே மிஸ்கின் கொஞ்சம் சத்தமாக வேகமாக தான் கொடுங்கள் என்று சொல்கிறார். அதற்கு சிவகார்த்திகேயன் எந்த பதிலும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். இதை குறிப்பிட்டு தான் ப்ளூ சட்டை மாறன் பதிவில், ரோபோ சங்கர் சொன்ன போது கிண்டல் செய்த சிவகார்த்திகேயன், மிஸ்கின் சொன்ன போது அமைதியாக இருக்கிறார். இது சிவகார்த்திகேயனுடைய இரட்டை வேடம் என்று கூறியிருக்கிறார் .