அப்போவே இந்த முட்டாள்தனமான கதைய காரி துப்பிட்டாங்க, இப்போ. பாபா ரீ-ரிலீஸ்ஸையும் விட்டு வைக்காத ப்ளூ சட்டை.

0
511
Blue Sattai
- Advertisement -

சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர்தான் ‘ப்ளூ சட்டை மாறன்’ இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் உள்பட யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார். இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.

-விளம்பரம்-

சமீபத்தில் வெளியான இரவின் நிழல் படத்தை கூட விமர்சித்து மாறன் தொடர்ந்து பதிவுகளை போட்டு வருகிறார். அதற்கு பார்த்திபனும் பதிலடி கொடுத்து இருந்தார். மேலும், இவர் அண்ணாத்த படம் வெளியான போதே அந்த படத்தை தாறு மாறாக விமர்சித்து பேசி இருந்தார். இதனால் ரஜினி ரசிகர்களும் இவரை திட்டி தீர்த்து வந்தனர். அதை தொடர்ந்து ரஜினியை இவர் அடிக்கடி கிண்டலடித்து வருகிறார்.

- Advertisement -

ரஜினியின் படங்களை மட்டும் அல்லாமல் இவரது தனிப்பட்ட செயல்பாடுகளை கூட கேலி செய்து வருகிறார் மாறன். சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற கிரியா யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரஜினி வாழ்க்கையில் பணம், பேர், புகழ் எல்லாவற்றையும் கடந்து நிம்மதியாக இருக்க வேண்டும். என் வாழ்க்கையில் நான் அனைத்து உச்சங்களையும் தொட்டுவிட்டேன். ஆனால், சித்தர்களிடம் உள்ள நிம்மதி, சந்தோஷம் 10 சதவீதம் கூட இதுவரை எனக்கு கிடைக்கவில்லை என்று பேசி இருந்தார்.

இதை விமர்சிக்கும் விதமாக ‘உங்க படத்துல வர்ற மாதிரி எல்லா சொத்தையும் ஏழைகளுக்கு எழுதி வச்சிட்டு… இமயமலையில் நிம்மதியை தேடலாமே ஜி’ என்று பதிவிட்டு கேலி செய்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் நேற்று ரஜினியின் பாபா படம் 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரீ ரிலீஸ் ஆகி இருந்தது. பாட்ஷா, அண்ணாமலை, வீரா என்று ரஜினியை வைத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த சுரேஷ் கிருஷ்ணா 2002 ஆம் ஆண்டு ரஜினியை வைத்து பாபா படத்தை எடுத்து இருந்தார்.

-விளம்பரம்-

ரஜினி, மனிஷா கொய்ராலா, சுஜாதா, கவுண்டமணி, நம்பியார் என்று பலர் இந்த படத்தில் நடித்து இருந்தார்கள்.அருணாச்சலம் படையப்பா ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து வெளியான பாபா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அந்த காலகட்டத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், எதிர்பார்த்தபடி அந்த படம் வெற்றியடையவில்லை. இருப்பினும் ரஜினி அந்த படத்தில் பல அரசியல் வசனங்களை பேசி இருந்தது அப்போதுபெரும் சர்ச்சையாக இருந்தது.

இதனால் ரஜினி ரசிகர்கள் இந்த படத்திற்கு ஆதரவு கொடுத்தார்கள். இன்றளவும் ரஜினி ரசிகர்களை பொறுத்தவரை பாபா திரைப்படம் ஒரு சூப்பர் ஹிட் திரைப்படம் தான். 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் வெளியான போதிலும் இந்த படத்தினை பலர் திரையரங்கில் சென்று பார்த்து கொண்டாடினர். இந்த படம் வெளியான போது ப்ளூ சட்டை மாறன் யூடுயூப் விமர்சனத்தை துவங்கவில்லை. இதனால் இப்போ சும்மா விடுவாரா. நேற்று வெளியான பாபா படத்தை விமர்சனம் என்ற பெயரில் கிழித்து தொங்கவிட்டுள்ளார்.

Advertisement