அஜித்தை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் பக்கம் திரும்பிய ப்ளூ சட்டை. பீஸ்ட் படத்தை ஹாலிவுட் படத்துடன் ஒப்பிட்டு போட்ட பதிவு.

0
660
beast
- Advertisement -

சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர் தான் ‘ப்ளூ சட்டை மாறன்’. இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார். இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.

-விளம்பரம்-

அதோடு இவர் ‘ஆன்டி இந்தியன்’ என்ற படத்தை இயக்கி நடித்தும் இருந்தார். இந்த படம் சரியாக ஓடவில்லை. பின் மீண்டும் இவர் தனது விமர்சன பணியை செய்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் ‘வலிமை’ படத்தை ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்து இருக்கிறார். நேர்கொண்ட படத்தை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருந்தார்.

- Advertisement -

சுமார் வெற்றியடைந்த வலிமை :

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழித்து அஜித் படம் வெளியாகி இருப்பதால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். ஆனால், எதிர்பார்த்தபடி இந்த படம் நடுத்தர ரசிகர்களை பூர்த்தி செய்யவில்லை. மேலும், இந்த படம் வெளியானதை பாண்டா பிரஷாந்த், சினிமா பையன் அபிஷேக் என்று பலர் விமர்சனம் செய்தனர். ஆனால், ப்ளூ சட்டை மாறன் வலிமை படத்தை குறித்து விமர்சனம் செய்தது பயங்கர சர்ச்சையானது. அதில் அவர், படத்தை கழுவி ஊற்றியுள்ளதோடு மட்டுமல்லாமல் அஜித்தை தொடர்ந்து உருவக் கேலி செய்து வந்தார்.

வலிமையை கேலி செய்த மாறன் ;

இதற்கு ரசிகர்கள் மட்டுமல்லாது பல பிரபலங்களும் கண்டனம் தெரிவித்தனர். ஆனாலும் தொடர்ந்து அஜித் மற்றும் வலிமை படத்தை கேலி செய்தே வந்தார். இவரின் இந்த கேலிக்கு ஒரு சில விஜய் ரசிகர்கள் கூட ஆதரவு தெரிவித்து இருந்தனர். இப்படி ஒரு நிலையில் தற்போது பீஸ்ட் படத்தை கேலி செய்யும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளை போட துவங்கி இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

-விளம்பரம்-

ஹாலிவுட் படத்தின் காப்பியா :

பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படம் ஒரு ஷாப்பிங் மாலில் நடைபெறும் ஒரு கதை என்பது ட்ரைலரில் இருந்தே தெரியவருகிறது. இதே போல கதையில் யோகி பாபு ‘கூர்கா’ என்ற படத்தில் நடித்துவிட்டார். இப்படி ஒரு நிலையில் பீஸ்ட் திரைப்படம் ஹாலிவுட்டில் வெளியான paul Blart Mali Cop என்ற படத்தின் காப்பி என்பது போல சூசகமாக பதிவு ஒன்றை போட்டுள்ளார் மாறன்.

Beastஐ குறி வைத்த மாறன் :

பீஸ்ட் படத்தின் ட்ரைலரில் விஜய் அறிமுகமாகும் காட்சியில் ஒரு துணியை கத்தியால் கிழித்துவிட்டு என்ட்ரி கொடுப்பார். அதனை குறிப்பிட்டு இருக்கும் மாறன் ‘காவியை கிழிக்கும் விஜய். தில்லான அரசியல் குறியீடு என ரசிகர்கள் கொண்டாட்டம்.’ என்று கூறியுள்ளார். இப்படி மாறன் போட்டுள்ள பதிவுகளால் அவர் பீஸ்ட்டை ரோஸ்ட் செய்ய குறி வைத்துவிட்டது போலவே தோன்றுகிறது. இதற்கு விஜய் ரசிகர்கள் எப்படி பதிலடி கொடுக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement