ஆன்டி இந்தியன் படத்திற்க்கு பின் ப்ளூ சட்டை மாறனுக்கு சிக்கிய முதல் தமிழ் படம் ‘அன்பறிவு’ தான் – வச்சி செஞ்சிட்டாரு ஆதினாவ

0
588
bluesattai
- Advertisement -

சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர் தான் ‘ப்ளூ சட்டை மாறன்’. இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார். இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பலர் புலம்பி கொட்டுகின்றனர்.

-விளம்பரம்-
maaran

இதற்காக அவர்கள் இவர் ஒரு படம் எடுத்தால் தான் அதனுடைய கஷ்டம் தெரியும் என்றும் கூறினர். மேலும், ப்ளூ சட்டை மாறன் படத்தை இயக்கும் எண்ணத்துடன் தான் சினிமா துறைக்கு வந்தார். இவர் முதலில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். ஆனால், அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் படங்களை விமர்சனம் செய்வதில் இறங்கிவிட்டார். இப்படி ஒரு நிலையில் இவர் ‘ஆன்டி இந்தியன்’ என்ற படத்தை இயக்கி இருந்தார்.

- Advertisement -

ப்ளூ சட்டை மாறன் இயக்கிய படம்:

இந்த படம் வெளியாவதற்க்கு முன்னர் இந்த படத்தின் பணிகள் நிறைவடைந்த படத்தை சென்சார் சான்றிதழுக்கு அனுப்பவுள்ளதாகவும் கூறி இருந்தார். ஆனால், இவரது படம் திடீரென்று சென்ஸர் ஆகாமல் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் இந்த படம் வெளியாகி இருந்தது. படத்தின் ஹீரோவாக மாறன் நடித்து இருந்தார். படத்தில் பாட்சா கதாபாத்திரத்தில் படம் முழுதும் ஒரு பிணமாகவே நடித்து இருக்கிறார்.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்த படம்:

anbarivu

இவருடைய படம் பயங்கரமான விமர்சனத்தை சந்தித்திருந்தது. மேலும், இவர் இயக்கத்தில் இயக்கி நடித்த ஆன்ட்டி இந்தியன் படம் வந்ததுக்கு பிறகு இவர் படங்களை ரிவ்யூ பண்ண மாட்டார் என்று எதிர்பார்த்தார்கள். இருந்தாலும் இவர் ஆங்கில படம் ஸ்பைடர்மேன் படத்தை விமர்சித்து இருந்தார். இவருடைய படத்திற்கு பிறகு முதன் முதலாக இவர் விமர்சனம் செய்த தமிழ் படம் அன்பறிவு. இந்த படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த அஸ்வின் ராம் இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

அன்பறிவு படம்:

மேலும், ஹிப்ஹாப் தமிழா ஆதியின் முதல் டபுள் ஆக்சன் திரைப்படமாக அன்பறிவு படம் உள்ளது. இந்த படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நெப்போலியன், விதார்த், ஆஷா சரத், சாய்குமார் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில் அன்பறிவு படத்தை ப்ளூ சட்டை மாறன் பயங்கரமாக கழுவி ஊற்றி இருக்கிறார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பது, இது ஒரு அறுந்த பழசான கிராமத்து குடும்ப கதை. கிராமத்து கதை என்று சொன்னவுடனே உங்களுக்கே படத்தோட கதை என்னவென்று புரிந்திருக்கும். படத்தில் குடுமி வைத்து இருக்கிறவன் அண்ணன். கண்ணாடி கிளாஸ் போட்டு இருக்கிறவன் தம்பி. அவன் இவன் இடத்துக்கு வருவான்.

அன்பறிவு படத்தை கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை மாறன்:

இவன் அவன் இடத்துக்கு போவான். அதேபோல் படத்தில் தாத்தா ஜில்லா ஓட தலைவர் இருக்கிறார். அதேபோல் கூடவே இருந்து குழி பறிக்கிற ஒருத்தர் இருப்பார். அப்புறம் கூடப்பொறந்த அக்கா, தங்கச்சி, மகள் என யாராவது ஒருத்தர் இந்த ஊருக்கே மகாராணி யாக இருப்பாங்க. அதே மாதிரிதான் இருக்கும் படத்தில் வருது. படத்தில் முதல் பகுதியில் சோத்துக்கே வழியில்லாமல் இருக்கிறவன் இரண்டாம் பாதியில் விமானத்தில் வந்து இறங்குகிறான். வழக்கம்போல படத்தில் ஹிப்ஹாப் ஆதி சுமாரா பாடி இருக்காரு.

பெண்கள் என்ன அந்த அளவுக்கு முட்டாளா?

படத்தில் ஒரு காட்சி கூட புதுசாக இல்லாமல் பழைய படங்களில் வந்த காட்சியை அப்படியே எடுத்துப் போட்டு இருக்காரு இயக்குனர். இந்த படத்தை எந்த தைரியத்தில் எடுக்கிறார் என்றால் வீட்டில் சீரியலை பார்த்திருக்கும் பெண்களுக்காக தான் என்று சொல்கிறார்கள். இந்த படத்தை எடுக்கிறார்கள். பெண்கள் என்ன அந்த அளவுக்கு முட்டாளா? என்று அன்பறிவு படத்தையும் பட குழுவினரையும் பங்கமாக விமர்சனம் செய்திருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். இவரின் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement