தமிழர்களை பிச்சை எடுக்க சொன்ன நடிகைக்கு ஹீரோயின் வாய்ப்பா? ரஜினி மகளை சாடிய ப்ளூ சட்டை.

0
549
- Advertisement -

லால் சலாம் பட கதாநாயகியை விமர்சித்து ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டிருக்கும் பதிவு தான் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கோலிவுட்டில் 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் லால் சலாம். இந்த படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் இயக்கியிருக்கிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இவர்களுடன் இந்த படத்தில் நிரோஷா, தங்கதுரை, தம்பி ராமையா, தன்யா பாலகிருஷ்ணன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், இந்த படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் மொய்தீன் பாய் என்ற கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் பிப்ரவரி ஒன்பதாம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்த படத்தை இயக்குனர் ஐஸ்வர்யா எடுத்திருக்கிறார். இந்நிலையில், இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக கடந்த வாரம் நடைபெற்றிருக்கிறது.

- Advertisement -

லால் சலாம் படம்:

இந்த விழாவில் ரஜினி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உட்பட குழுவினர் பலருமே கலந்து கொண்டிருந்தார்கள்.
பின் விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், காக்கா- கழுகு கதை, விஜய் குறித்த சர்ச்சைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்திருந்தார். மேலும், இந்த படத்தின் ரிலீஸாக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த படத்தில் நடித்திருக்கும் கதாநாயகி தன்யா குறித்து ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டு இருக்கும் சர்ச்சை பதிவு வைரலாகி வருகிறது.

ப்ளூ சட்டை மாறன் பதிவு:

அந்த பதிவில் அவர், தன்யா பாலகிருஷ்ணன் பெங்களூரில் வசிப்பவர். அவர் ஏழாம் அறிவு, காதலில் சொதப்புவது எப்படி, நீ தானே என் பொன்வசந்தம், ராஜா ராணி போன சில படங்களில் நடித்திருக்கிறார். பின் இவர் வாயை மூடி பேசவும், மாரி போன்ற படங்களை இயக்கிய பாலாஜி மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதற்குப்பின் இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, படங்கள் என்று நடித்துக் கொண்டு வருகிறார்.

-விளம்பரம்-

தன்யா பதிவு:

இதனை அடுத்து சில வருடங்களுக்கு முன்பு சி எஸ் கே vs ஆர் சி பி அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் போட்டி குறித்து இவர் போட்டிருந்த பதிவு சோசியல் மீடியாவில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தி இருந்தது. அதில் தன்யா, தண்ணீருக்காக எங்களிடம் பிச்சை எடுக்கிறீர்கள். எங்கள் பெங்களூரை ஆக்கிரமித்து அந்த ஊரை கொச்சைப்படுத்துகிறீர்கள். எங்களிடம் பிச்சை கேட்பதால் தருகிறோம் என்று கூறியிருந்தார். இதனால் இவருக்கு எதிராக நிறைய கண்டனங்கள் வந்தது. அதுமட்டுமில்லாமல் ‘ஹேட்தன்யா’ என்ற ஹாக்ஸ் டேக்குகள் ட்ரெண்டிங் ஆகி இருந்தது.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்:

இதனால் கடுப்பான தன்யா, இனி தமிழ் படங்களில் நடிக்கவே மாட்டேன் என்று சபதம் போட்டிருந்தார். சரி இப்போ இதை சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்று கேட்கிறீர்களா? ரஜினியின் லால் சலாம் படத்தின் கதாநாயகி இவர் தான். எத்தனையோ நடிகைகள் இருக்கும்போது தமிழர்களை பிச்சை எடுப்பவர்கள் என்று கூறிய இவரை ஹீரோயினியாக ஐஸ்வர்யா நடிக்க வைத்திருக்கிறார். இதற்கு ரஜினியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தலீவரை சங்கீ இல்லை என்று கூறி ஐஸ்வர்யா இதற்கு என்ன பதில் கூறுவார்? சினிமா ரசிகர்கள் உங்கள் வேலை இந்த படத்தை சூப்பர் ஹிட் ஆக்குவது மட்டுமே. மற்றபடி வேற எந்த கேள்வியும் கேட்காதீர்கள் என்ஜாய் என்று கூறி இருக்கிறார்.

Advertisement