‘இதெல்லாம் ஒரு பொழப்பா?’ – சிறந்த நடிகருக்கான விருதை பெற்ற விஜய் சேதுபதியை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்.

0
385
vjs
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய கடும் சினிமா மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார். தன்னுடைய எதார்த்தமான நடிப்பும், பேச்சின் மூலம் சினிமா உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்த விஜய் சேதுபதி விக்ரம் படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார்.

-விளம்பரம்-

இதனை அடுத்து சீனு ராமசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த மாமனிதன் படத்தில் விஜய் சமீபத்தில் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை அடுத்து விஜய் சேதுபதி அவர்கள் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். தற்போது விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் டிஎஸ்பி.

- Advertisement -

சர்வதேச திரைப்பட விழா :

இந்த நிலையில் சென்னையில் கடந்த 15ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரையில் சர்வதேச திரைப்பட விழா நடை பெற்றது. அந்த விழாவில் பல திரைப்படங்கள் வெளியிடப்பட்டன மேலும் விழாவின் முடிவில் சினிமா கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அந்த வகையில் “மாமனிதன்” படத்தில் நடித்திருந்த விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகருக்கான விருதும், கார்கி படத்தில் நடித்ததற்காக சாய் பல்லவிக்கு சிறந்த நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டது.

விழாவில் விஜய் சேதுபதி கூறியது :

விருது வாங்கியவுடன் விஜய் சேதுபதி சில வார்த்தைகளை பேசினார். அதில் மாமனிதன் படத்தை பற்றி பேசிய பிறகு, படங்கள் அனைத்துமே விமர்சங்களை வைத்தே பார்க்கப்படுகின்றனர். அப்படி பார்ப்பது தவறு. இப்போதெல்லாம் யூடியூபில் தவறாக பேசினால் தான் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். அதனால் தான் பணனும் வருகிறது. விமர்சனப் பார்வையில் படம் சரியாக பார்க்கப்படுகிறதா என்று தெரியவில்லை ஆனால் எந்த படத்தையும் விமர்சனத்தை வைத்து எடை போட வேண்டாம் என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

மேலும் தனக்கு கிடைத்த பரிசு தொகை ரூ25,000தை சென்னை சர்வதேச திரைப்பட விழா கமிட்டிக்கு நன்கொடையாக கொடுத்த விஜய் சேதுபதி தனக்கு கிடைத்த சிறந்த நடிகர் விருதை ‘பூ’ ராமு அவர்களோடு பகிர்ந்து கொள்வதகாவும் கூறியிருந்தார்.

விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறன் :

இந்த நிலையில் விஜய் சேதுபதி சிறந்த நடிகருக்கான விருதை வாங்கியது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் விமர்ச்சிருந்தார். அந்த பதிவில் `சென்னை சர்வதேச திரைப்பட விழா நடக்கும் சத்யம் தியேட்டரில் ஒருவாரமாக குட்டிபோட்ட பூனை போல சுற்றி. விழாக்கமிட்டி, ஜுரி, அமைச்சர் என அனைவரையும் நச்சரித்து சிறந்த நடிகர் விருதை வாங்கிவிட்டார் விருது வெறியர். ‘இதெல்லாம் ஒரு பொழப்பா?’ என்று பலரும் புளிச்சென துப்பி வருகிறார்கள்.

ப்ளூ சட்டை மாறன் போட்டிருந்த இந்த ட்விட் பதிவு வைரலாகவே விஜய் சேதுபதியை இப்படி விமர்ச்சித்த மாறனை பலர் கடுமையாக திட்டி ட்விட் செய்து வருகின்றனர். மேலும் சென்னைக்கு “கென்னை” என்று ப்ளூ சட்டை மாறன் போட்டிருந்த வார்த்தியை சுட்டி காட்டி கலாய்த்தும் வருகின்றனர் விஜய் சேதுபதி ரசிகர்கள்.

Advertisement