தன் படத்தில் நீக்கப்பட்ட ‘ஜாதி மற்றும் ஜட்டியை ஒப்பிட்டு’ வைக்கப்பட்ட வசனம் குறித்து பேசிய மாறன். (செமயா இருக்கு பாருங்க)

0
786
maaran
- Advertisement -

சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர்தான் ‘ப்ளூ சட்டை மாறன்’ இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் உள்பட யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார். இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.

-விளம்பரம்-

ப்ளூ சட்டை ஆன்டி இந்தியன் :

இதற்காக அவர்கள் இவர் ஒரு படம் எடுத்தால் தான் அதனுடைய கஷ்டம் தெரியும் என்றும் கூறினர். ப்ளூ சட்டை மாறன் படத்தை இயக்கும் எண்ணத்துடன் தான் சினிமா துறைக்கு வந்தார். இவர் முதலில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். ஆனால் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் படங்களை விமர்சனம் செய்வதில் இறங்கிவிட்டார். இப்படி ஒரு நிலையில் இவர் ‘ஆன்டி இந்தியன்’ படத்தை இயக்கி இருந்தார்.

இதையும் பாருங்க : என்னது, பிக் பாஸ் போட்டியாளர் இறந்துட்டாரா ? சர்ச்சையை கிளப்பிய ஜேம்ஸ் வசந்தன் பதிவு. ரசிகர்களின் கமென்ட்ஸ்.

- Advertisement -

இந்த படம் வெளியாவதர்க்கு முன்னர் இந்த படத்தின் பணிகள் நிறைவடைந்த படத்தை சென்சார் சான்றிதழுக்கு அனுப்பவுள்ளதாகவும் கூறி இருந்தார். ஆனால், இவரது படம் திடீரென்று சென்ஸர் போர்டால் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் இந்த படம் வெளியாகி இருந்தது. ஹீரோ மாறன் படத்தில் பாட்சா கதாபாத்திரத்தில் படம் முழுதும் ஒரு பிணமாகவே நடித்து இருக்கிறார்.

தன் படத்திற்கு மாறன் கொடுத்த விமர்சனம் :

மேலும், சில அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அவர் கொலை செய்யப்படுகிறார். இந்து தாய்க்கும், முஸ்லிம் தந்தைக்கும் பிறப்பவர் தான் பாட்சா. பின்னர் இவரது உடலை வைத்து நடக்கும் அரசியல் வேலைகளே இந்த படத்தின் கதை. இந்த படம் மிகவும் சுமாரான விமர்சனத்தை மட்டுமே பெற்று வருகிறது.

-விளம்பரம்-

படத்தில் நீக்கப்பட்ட வசனம் :

மேலும், இந்த படத்தின் பல முக்கியமான காட்சிகளையும் வசனங்களையும் சென்சார் போர்டு நீக்கிவிட்டதாக கூறி இருந்தார் மாறன். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மாறனிடம், இந்த படத்தில் எதாவது பிரபலமான வசனம் இருக்கிறதா என்று பத்திரிகையாளர் ஒருவர் கேட்டிருந்தார்.

ஜாதியும் ஜட்டியும் :

இதற்க்கு பதில் அளித்த மாறன் ‘பிரபலமான வசனத்தை விட, எனக்கு பிடிச்ச ஒரு வசனம் இந்த படத்தில் வரவில்லை என்பதில் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது என்று கூறி இருந்தார். அது என்ன என்று கேட்கப்பட்ட போது ‘மதம் என்பது ஜட்டி மாதிரி, அத நீ போடலாம் போடாம இருக்கலாம் அது உன் இஷ்டம். ஆனா, உன் ஜட்டிய இன்னொருத்தன போட சொல்ற பாருடா அது ரொம்ப ரொம்ப தப்புடா என்பது தான் அந்த டைலாக் ‘ என்று கூறியுள்ளார் மாறன்.

Advertisement