தன் படத்தை கேலி செய்தவரின் டீவீட்டை ரீ-ட்வீட் செய்த டிஸ்ட்ரிபியூட்டரின் படங்களை வச்சி செய்த ப்ளூ சட்டை மாறன்.

0
438
bluesattai
- Advertisement -

சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர்தான் ‘ப்ளூ சட்டை மாறன்’ இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் உள்பட யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார். இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.

-விளம்பரம்-

இதற்காக அவர்கள் இவர் ஒரு படம் எடுத்தால் தான் அதனுடைய கஷ்டம் தெரியும் என்றும் கூறினர். ப்ளூ சட்டை மாறன் படத்தை இயக்கும் எண்ணத்துடன் தான் சினிமா துறைக்கு வந்தார். இவர் முதலில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். ஆனால் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் படங்களை விமர்சனம் செய்வதில் இறங்கிவிட்டார். இப்படி ஒரு நிலையில் இவர் ‘ஆன்டி இந்தியன்’ படத்தை இயக்கி இருக்கிறார்.

இதையும் பாருங்க : புஷ்பா படத்தில் செம குத்தாட்டம் போட்டுள்ள சம்மு – வெளியான வீடியோ (இந்த டான்ஸ்ஸுக்கு தான் அத்தனை கோடியா ? )

- Advertisement -

பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் இன்று வெளியாகி இருந்தது. ஹீரோ மாறன் படத்தில் பாட்சா கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். மேலும், சில அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அவர் கொலை செய்யப்படுகிறார். இந்து தாய்க்கும், முஸ்லிம் தந்தைக்கும் பிறப்பவர் தான் பாட்சா. பின்னர் இவரது உடலை வைத்து நடக்கும் அரசியல் வேலைகளே இந்த படத்தின் கதை.

இந்த திரைப்படத்திற்கு சுமாரான விமர்சனமே வந்து கொண்டு இருக்கும் நிலையில் இந்த படத்தை பார்த்த பல பிரபலங்கள் இந்த படம் குறித்த கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த படத்தை பார்த்துவிட்டு ட்விட்டரில் நாகநாதன் என்பவர் ‘சமீபத்தில் தான் ஆன்டி இந்தியன் படத்தை பார்த்தேன். இதுவரை நான் பார்த்த படங்களில் மிகவும் மோசமான ஒரு படம். படம் முழுவதும் உட்காரக்கூட முடியவில்லை’ என்று கமெண்ட் செய்திருந்தார். இந்த பதிவை சக்தி பிலிம் பேக்டரி என்ற பட விநியோகிஸ்த நிறுவனமொன்று ரீ-ட்வீட் செய்திருந்தது.

-விளம்பரம்-

இதைப் பார்த்த ப்ளூ சட்டை மாறன் சும்மா இருப்பாரா இந்த பதிவை போட்டவரை விட்டுவிட்டு ரீட்வீட் செய்த சக்தி பிலிம் பேக்டரி ரிவீட் அடிக்கும் வகையில் ‘உங்கள் விளம்பரத்திற்கு நன்றி சக்தி பிலிம் பேக்டரி. ஆனால், நாங்கள் உங்களின் Mr . லோக்கல் ஜாக்பாட், உறியடி 2 , டிரிப், ஜீனியஸ், போன்ற பல படங்களை எல்லாம் நன்றாக ரசித்தோம்’ என்று பதிலடி கொடுத்திருக்கிறார்

Advertisement