சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர் தான் ‘ப்ளூ சட்டை மாறன்’ இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என்று யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார்.நடிகர்கள் முதல் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் என யாரையும் விட்டுவைக்காமல் விமர்சித்து இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் கவின் நடித்துள்ள ஸ்டார் படத்தை விமர்சனம் செய்து இருக்கிறார்.

ஸ்டார் படத்தை விமர்சனம் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன் 'இந்த படத்தில் உள்ள கதையை அப்படியே படமாக எடுத்தால் ஒரு ஷார்ட் பிலிம் ஆகத்தான் வரும். இதை ஒரு படமாக எடுக்கிறேன் என்று என்னென்னமோ எடுத்து வைத்திருக்கிறார்கள். நம்ம கூட டாடா படத்தை பார்த்துவிட்டு கவினுக்கு சப்ஜெக்ட் நாலேட்ஜ் இருக்கிறது என்று நம்பி போனால். இந்த படத்தில் நடிக்கவே மாட்டேன் என்று ஓடிய ஹரிஷ் கல்யாணத்துக்கு இவரை விட எவ்வளவு சப்ஜெக்ட் நாலேட்ஜ் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
படத்தில் கலையரசன் என்ற கதாபாத்திரத்தில் கவீன் நடித்திருக்கிறார். இவருடைய அப்பாவாக லால், கவின் அம்மா கதாபாத்திரத்தில் கீதா கைலாசம் நடித்திருக்கிறார்கள். இவர் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு சிறுவயதில் இருந்து சினிமாவின் மீது தீராத காதல். எப்படியாவது சினிமாவில் பெரிய ஸ்டார் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இவருக்கு உறுதுணையாக அவருடைய தந்தையும் இருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=dIKVHsn71qk
அதோடு சினிமாவில் எந்த அளவிற்கு உயரம் போக முடியுமோ அந்த அளவிற்கு கீழேயும் தள்ளிவிடும். இதனால் கவினுக்கு சாதிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பின் போது கவின் சந்தித்த விபத்து என்ன? அந்த விபத்திலிருந்து கவின் மீண்டு வந்து நடிகன் ஆனாரா? என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் கவின் பள்ளி, கல்லூரி, இளைஞர், அலுவலகத்தில் வேலை செய்யும் நபராக என பல கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.
இவரை அடுத்து தந்தை ரோலில் லால் நடிப்பு மிரட்டல் ஆக இருக்கிறது. அதேபோல் படத்தில் வரும் மற்ற நடிகர்களும் தங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். சினிமா என்பது எந்த அளவிற்கு உயரத்திற்கு கொண்டு செல்லுமோ அதே அளவிற்கு கீழேயும் தள்ளும் என்பதை இயக்குனர் சிறப்பாக காண்பித்து இருக்கிறார். சொல்லப்போனால் தன்னுடைய சொந்த அனுபவத்தை காண்பித்திருக்கிறார் என்று சொல்லலாம்.
https://twitter.com/Ragav_Tweetz/status/1789180865836372142
90 காலம் பட்டம் தொடங்கி தற்போது இருக்கும் காலகட்டத்திற்கு ஏற்ப பொருள், ஆடை அலங்காரத்தை, முகபாவனைகளை இயக்குனர் காண்பித்து இருப்பது நன்றாக இருக்கிறது. கல்லூரி காலங்களுக்கு ஏற்ப காதல், பிரிவு அனைத்தையும் இயக்குனர் காண்பித்து இருக்கிறார். படத்தில் சில வசனங்கள் நன்றாக இருந்தாலும் சில வசனங்கள் உணர்வுபூர்வமாக இல்லை. ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள். கிளைமாக்ஸ் டெஸ்ட் நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக ஸ்டார் இருக்கிறது.






