சிறு வயதிலேயே இவர் பெண்களிடம் தகதவாறு நடந்திருப்பார்.! ப்ளூ சட்டையை வெளுத்த பிக் பாஸ் நடிகை.!

0
6376
Blue-sattai

தமிழ் சினிமாவில் வெளியாகும் நல்ல படங்கள் பற்றி கூட இவர் தவறாக விமர்சித்துள்ளார் என ஏற்கனவே சில சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். சமீபத்தில் பிரபு தேவா இயக்கத்தில் வெளியான சார்லி சாப்ளின் படத்திற்கு நல்ல விமர்சனத்தை சொல்ல வேண்டும் என்றால் பணம் தர வேண்டும் மிரட்டியதாக கூட ஒரு சர்ச்சை எழுந்தது. 

தரமான படமோ, சுமாரான படமோ தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களை தயவு தாட்சண்யம் இல்லாமல் விமர்சனம் செய்து வரும் ப்ளு சட்ட மாறன், சமீபத்தில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தையும் கடுமையாக விமர்சித்திருந்தார். இதனால் அவரை அஜித் ரசிகர்கள் கிழித்தெடுத்து வருகின்றனர்.

இதையும் பாருங்க : டெவில் யார்? ஏஞ்சல் யார்? அதிகம் பேர் ஏஞ்ஜல்னு சொன்னது இவரை தான்.! 

- Advertisement -

மாறனின் விமர்சனத்தில், இந்த படம் பப், நைட் லைப் போன்றவற்றை விரும்பும் வெகு சிலருக்கும் மட்டும் தான் இந்த படம் புடிக்கும். இந்தி ரசிங்கர்களுக்கு உள்ள கலாச்சாரம் வேறு என்று கூறியிருந்தார். மேலும், பெண்கள் சுதந்திரம் என்ற பெயரில் என்ன வேண்டுமாலும் செய்து விடலாமா என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் மாறனின் இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ள பிரபல நடிகையும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான காயத்திரி, புகை குடிக்கும் பெண்கள்சிரித்து பேசினாலோ, தொட்டு பேசினாலோ அவருடன் படுப்பது எளிது என்று இவர் நினைக்கிறார். அவர் சிறுமிகளை துன்புறுத்தியவர்களில் ஒருவராக இருந்திருக்க வேண்டும், மேலும் அவர் இளம் வயதிலேயே பெண்களை துன்புறுத்தியிருக்க வேண்டும் அல்லது இன்னும் விஷயங்களைச் செய்திருக்க வேண்டும். அதனால்தான் அவரது மதிப்புரைகள் இது போன்றவை.

-விளம்பரம்-
Advertisement