‘தயவு செஞ்சி ஆயுதத்தை உள்ள வை குமாரு. அதை வெளிய எடுத்ததாலதான் இவ்ளோ பிரச்னையே – Skவின் ஆயுத பூஜை புகைப்படத்தையும் கலாய்த்த ப்ளூ சட்டை

0
408
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும், கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர் தான் ‘ப்ளூ சட்டை மாறன்’. இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து இருக்கிறார். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.

-விளம்பரம்-

பொதுவாக ஒரு பெரிய ஹீரோவின் படம் வாந்தாலே அதனை டார்கெட் செய்து ஒரு வாரத்தை ஓட்டிவிடுவார் ப்ளூ சட்டை. இப்படி இருக்கும் போது சமீபத்தில் இமான், சிவகார்த்திகேயன் பற்றி சொன்ன விஷயத்தை கேலி செய்யும் வகையில் பதிவிட்டு இருக்கிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் டி இமான் அவர்கள் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று கூறி இருந்தார்.

- Advertisement -

இப்படி டி.இமான் வெளிப்படையாக பேசி இருந்தது குறித்து பலரும் பல விதமான கருத்துக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் இமான், சிவகார்த்திகேயன் குறித்து பேசிய பதிவுகளை பதிவிட்ட மாறன் ‘CSK எனக்கு செய்த மிகப்பெரிய துரோகம் – இமான் பேட்டி என்று குறிப்பிட்டுள்ளார். சிவகார்த்திகேயன் பெயரை தான் Sk என்பதற்கு பதிலாக CSK என்று குறிப்பிட்டுவிட்டார் என்று பார்த்தால், அடுத்த ட்வீட்டில் ‘CSK என்றால் Cringe Sivakarthkeyan. உங்கள் சந்தேகங்கள் தீர்ந்து இருக்கும் என்று நம்புகிறேன் ‘ என்று பதிவிட்டு இருந்தார்.

மேலும், இந்த விவகாரத்தை விடாமல் கணவன் மனைவி இடையே கோள்மூட்டு விட்டு குடும்பத்தை பிரித்த CSKவின் செயல் சரியானது, கேவலமானது என்று வாக்கெடுப்பை எல்லாம் நடத்தி இருக்கிறார். மேலும், வடிவேலு பட காமெடி, கள்ளக்காதல் காமெடி போன்றவை எல்லாம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து மேலும் மேலும், இந்த விவகாரத்தை கிளறி வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.

-விளம்பரம்-

இந்த நிலையில் மீண்டும் சிவகார்த்திகேயனின் சீண்டும் வகையில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் நான் ஆணையிட்டால் பாடலின் வீடியோவை பதிவிட்டு இசைமான் பேட்டி வைரல் ஆனதால் கடும் அதிர்ச்சி அடைந்தார் ப்ரின்ஸ். இந்த செய்தி விவாதப்பொருள் ஆகிவிட்டால்..குடும்பங்கள் கொண்டாடும் ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ எனும் தனது இமேஜுக்கு கடும் சேதாரம் ஏற்படும் என்பதால்.. மறுநாளே சிலகோடி வரை செலவு செய்து பல மீடியாக்களின் வாயை அடைத்து இருக்கிறாராம்.

சோஷியல் மீடியாவிலும் தனது IT Team மூலம் இந்த சேதாரத்தை சரிசெய்ய கடும் முயற்சி எடுத்து வருகிறார். ‘ப்ரின்ஸ் எவ்வளவு நல்லவர் தெரியுமா. ஈ, எறும்புக்கு கூட துரோகம் செய்யாத சுத்த தங்கம். இவர் மேல பழி போடறது ஆண்டவனுக்கே பொறுக்காது’ என பல அல்லைக்கைகளை அனுப்பி யூ ட்யூப் சேனல்களுக்கு புல்லரிப்பு பேட்டிகளை தர வைத்திருக்கிறார். ‘இசைமான் மட்டும் யோக்கியமா?’ என்று பழியை எதிர்பக்கம் போட்டு ஆட்டத்தை கலைத்து வருகிறார்கள் இந்த ப்ரின்ஸ் அல்லக்கைகள்.

ஆனா ஒண்ணு மட்டும் ஞாபகம் வச்சிக்க. எத்தனை கோடி தந்தாலும்… எல்லாரையும் விலைக்கு வாங்கிட முடியாது. நீ செஞ்ச துரோகத்துக்கான பலனை அனுபவிச்சே ஆகனும். ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது என்று பதிவிட்டுள்ளார். அதோடு சிவகார்த்திகேயன் ஆயுத பூஜை கொண்டாடிய புகைப்படம் ஒன்று வெளியானது. இதனை விமர்சித்துள்ள ப்ளூ சட்டை ‘செய்தி: ஆயுத பூஜையை கொண்டாடினார் மாவீரன். ‘தயவு செஞ்சி ஆயுதத்தை உள்ள வை குமாரு. அதை வெளிய எடுத்ததாலதான் இவ்ளோ பிரச்னையே’ என்றும் பதிவிட்டுள்ளார்.

Advertisement