துணிவு வாரிசு படத்துக்கு Positive Review சொல்ல Blue Sattai க்கு இத்தனை கோடி வழங்கப்பட்டதா

0
709
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் நடிக்கும் திரைப்படங்கள் வரும் பொங்களை முன்னிட்டு 11ஆம் தேதி வெளியாக உள்ளதால் இரு ரசிகர்களுக்கும் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டு வரும் நிலையில் சோசியல் மீடியாவில் பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் போட்டிருக்கும் பதிவினால் எரியும் நெருப்பில் சிறிது எண்ணெய்யை ஊற்றியது போல ஆகியுள்ளது.

-விளம்பரம்-

விஜய் நடித்துள்ள வாரிசும் அஜித் நடித்துள்ள துணிவும் ஒன்றாக வெளியாகிறது என்று கூறியதில் இருந்தே விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது. அதிலும் முதல் சிங்கில் வெளியானதில் இருந்தே எந்த பாடல் அதிக ஹிட் அடிக்கும் என இரு நடிகர்களின் ரசிகர்கள் மத்தியில் போட்டியாகவே இருந்து வருகிறது. கிட்டதட்ட இவரின் ரசிகர்கள் அவரை விமரிசிப்பதும் அவரின் ரசிகர்கள் இவரை விமரிசிப்பதுமாக கைகலப்பு வரையில் இந்த விஷயம் தற்போது சென்று கொண்டிருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் கடத்த வருடம் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி அஜித் நடித்திருக்கும் துணிவு படத்தின் ட்ரைலர் வெளியாகி 24 மணி நேரத்தில் அதிக பார்வையாளர்களை பெற்று முன்னிலை வகித்து. ஆனாலும் அந்த ட்ரைலரில் எப்போது படம் வெளியாகும் என குறிப்பிட வில்லை. இந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி பலரும் எதிர்பார்த்து கொண்டிருந்த வாரிசு படத்தில் ட்ரைலர் வெளியாகியது ஆனால் துணிவு செய்த சாதனையை முந்த முடியவில்லை.

அதாவது அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் ட்ரைலர் வெளியான போது 24 மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி சாதனை படைத்து ஆனால் வாரிசு படம் வெளியாகி 24 மணி நேரத்தில் 23 மில்லியன் பார்வையாளர்களை மட்டுமே பெற்றது. மேலும் ட்ரைலர் வெளியாகி 2 நாட்கள் முடிந்த நிலையிலும் கூட 34 மில்லியன் பார்வையாளர்களை தாண்ட திணறிக்கொண்டிருக்கிறது.

-விளம்பரம்-

இதனை பார்த்த ரசிகர்கள் துணிவு படத்தின் ட்ரைலருக்கு Ads கொண்டு அதிக விய்ஸ் கொண்டு வருகின்றனர். ஆனால் வாரிசு ட்ரைலரில் Ads இல்லாததினால் அதிக வியூஸ் வரவில்லை என்று கூறிவருகின்றனர். இதனை கவனித்த சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் துணிவுக்கு ஆடியோ லாஞ்ச் ப்ரமோஷன் செய்யவில்லை. எந்த ப்ரமோஷனுக்கும் அஜித் வராமலே இவ்வளவு ஆதரவு இருக்கிறது என பதிவிட்டிருந்தார்.

ப்ளூ சட்டை மாறன் போட்டுள்ள இந்த பதிவு வைரலாகவே விஜய் ரசிகர்களை இது தூண்டி விட்டு ரசிகர்கள் ஒருவரை ஒருவர் சோசியல் மீடியாவில் விமரிசித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் சிலர் நடிகர் விஜய்யும் வாரிசு படக்குழுவும் சினிமா விமர்சகர்களான ப்ளு சட்டை மாறனுக்கும், பிரசாந்த் என்பவருக்கும் ஆளுக்கு தலா 1கோடி கொடுத்து துணிவு படத்திற்கு மோசமாகவும், வாரிசு படத்திற்கு நன்றாகவும் ரிவியூ சொல்வதற்கு கொடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. மேலும் இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement