‘இத எப்ப சொல்லபோறீங்க.. கமாண்டர்’ – விஜய்யின் பேச்சை கேலி செய்த ப்ளூ சட்டை

0
2240
- Advertisement -

மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் விஜய் பேசியது குறித்து ப்ளூ சட்டை மாறன் போட்டு இருக்கும் ட்விட் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் விஜய் மாணவர்களுக்கு விருது வழங்கிய நிகழ்வு குறித்து தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக விஜய் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இதனால் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதோடு விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தேர்தலில் நின்று வெற்றி பெற்று இருக்கிறார்கள். இது அரசியல் வட்டாரத்தில் கதிகலங்க வைத்தது. அதுமட்டுமில்லாமல் விஜய் அழைத்து அவர்களை பாராட்டியும் இருந்தார். அதுமட்டும் இல்லாமல் விஜய் தன் ரசிகர்களை அடிக்கடி சந்தித்தும் வருகிறார். விஜயின் இந்த சந்திப்பு எல்லாம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

விஜய் மக்கள் இயக்கம்:

அதோடு விஜய் சினிமாவை தாண்டி பொதுநல சேவைகளையும் செய்து கொண்டு வருகிறார். இதனால் இவர் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்களில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து வழங்குகிறார். இந்த நிகழ்வு சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்று இருக்கிறது.

மேடையில் விஜய் பேசியது:

மாணவர்களுக்கு நடிகர் விஜய் அவர்கள் ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் சில மாணவர்களின் கோரிக்கையும் மேடையிலேயே விஜய் நிறைவேற்றி இருக்கிறார். கிட்டத்தட்ட 10 மணி நேரத்திற்கு மேலாக இந்த விழா நடைபெற்றிருக்கிறது. இந்த விழாவில் விஜய் அவர்கள் மாணவர்களின் எதிர்காலம் குறித்தும், கல்வி குறித்தும், அரசியல் குறித்தும், தலைவர்கள் குறித்தும் பேசி இருக்கிறார்.

-விளம்பரம்-

ப்ளூ சட்டை மாறன் டீவ்ட்:

அதுமட்டுமில்லாமல் கட்டவுட், பிளக்ஸ், பேனர் எல்லாம் வைக்க கூடாது என்று விஜய் கூறியிருந்தார். பின் நிகழ்ச்சியில் காசு வாங்கிட்டு ஓட்டு போடாதீர்கள், மாணவர்கள் நீங்கள் தான் பெற்றோர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று பல விஷயங்களை விஜய் கூறியிருந்தார். இதற்கு பலருமே பாராட்டி வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். இந்த நிலையில் விஜய் பேசியதற்கு ப்ளூ சட்டை மாறன் ட்விட் ஒன்று போட்டு இருக்கிறார்.

ப்ளூ சட்டை மாறன் சொன்னது:

அதில் அவர், காசு வாங்கிட்டு ஓட்டு போடாதீங்க’… கமாண்டர் விஜய் மக்களுக்கு அறிவுரை. கட்அவுட், ஃபிளக்ஸ், பேனருக்கு நிறைய செலவு பண்ணாதீங்க. கவுண்டர் ரேட்ல மட்டும் டிக்கெட் வாங்குங்க. இதை எப்ப சொல்ல போறீங்க கமாண்டர் என்று விஜய்யை கலாய்த்தவாறு பதிவு போட்டிருக்கிறார். தற்போது ப்ளூ சட்டை மாறனின் இந்த பதிவுதான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இதற்கு சிலர் ஆதரித்தம் சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகிறார்கள்.

Advertisement