சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர்தான் ‘ப்ளூ சட்டை மாறன்’ இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் உள்பட யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார். இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.

அணைத்து படங்களையும் விமர்சிக்கும் மாறன் ஒரு படத்தை எடுத்துக்காட்டட்டும் என்று பலரும் மாறனை விமர்சித்துள்ளனர். இப்படி ஒரு நிலையில் இவர் ஒரு புதிய படத்தை இயக்குவதாக அறிவித்து கடந்த 2019 ஆம் படத்தின் அறிவிப்பையும் அறிவித்தார்.இப்படி ஒரு நிலையில் தனது படத்திற்கு ‘ஆன்டி இந்தியன்’ என்ற தலைப்பு வைத்துள்ளதாகவும், படத்தின் பணிகள் நிறைவடைந்த படத்தை சென்சார் சான்றிதழுக்கு அனுப்பவுள்ளதாகவும் கூறி இருந்தார்.

Advertisement

இந்த படத்தின் பணிகளை முடித்துவிட்டு தணிக்கை குழுவுக்கு அனுப்பினார் மாறன். ஆனால், படத்திற்கு தணிக்கை குழு தடை விதித்தது. படத்தில் ரஜினியை கேலி செய்ததால் தான் படத்திற்க்கு தணிக்கை குழு தடை விதித்ததாகவும் கூறப்பட்டது. பஇப்படி ஒரு நிலையில் இந்த விவாகரத்தில் வழக்கு போட்டு தன் படத்திற்கு போராடி தணிக்கை சான்றிதழை வாங்கிவிட்டார் மாறன்.

சமீபத்தில் இந்த படம் குறித்த பிரெஸ் மீட்டில் பேசிய மாறன், இந்த படத்திற்கு சென்சார் போர்டு தடை விதித்தபோது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ‘காட் இஸ் கிரேட்’ என்று ட்வீட் போட்டு இருந்தார். அதற்கு லிப்ரா தயாரிப்பாளர் ரவீந்திரன் ‘காட் இஸ் டபுள் கிரேட்’ என்று பதிவிட்டு இருந்தார். அந்த தயரிப்பாளருக்கு அறிவு இல்ல, இது ஒரு இயக்குனரின் படம் என்பதை விட உங்கள போல ஒரு தயாரிப்பாளரின் படம் தானே என்று கூறியுள்ளார் மாறன்.

Advertisement

மேலும், இந்த படத்தில் கபாலி என்ற பெயரும், ராஜா என்ற பெயரும் யாரையே குறிப்பிடுவதாக இருப்பதாக அந்த பெயர்களை சென்சார் போர்டு கூறியதாகவும் மாறன் கூறியுள்ளார். மேலும், இந்த படத்திற்க்கு ‘ஆன்டி இந்தியன்’ தலைப்பிற்கு பதிலாக வேறு தலைப்பை வையுங்கள் என்று சொன்னார்கள். அப்போது நாங்கள் ஏற்கனவே திட்டமிட்டு இருந்த ‘கேனப்பய ஊர்ல கிறுக்கு பைய நாட்டாமை’ என்ற டைட்டிலை சொன்னோம். அதுக்கு இந்த டைட்டிலேயே பரவாயில்லன்னு சொல்லிடாங்க அதனால் இதே டைட்டிலை வச்சிட்டோம். இந்த படத்தை பார்த்துவிட்டு வரும் விமர்சங்களை வரவேற்கிறோம். மேலும், சிறந்த விமர்சனத்திற்கு பரிசும் கொடுக்க திட்டமிட்டுள்ளோம் என்றும் கூறியுள்ளார் மாறன்.

Advertisement
Advertisement