நாடக காதல் படத்துக்கு எதிரா இவர் ஒரு நாடகத்த எடுத்து வச்சிருக்காரு – பா ரஞ்சித் படத்தை கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை.

0
426
bluesattai
- Advertisement -

நட்சத்திரம் நகருகிறது இயக்குனர் பா. ரஞ்சித்தை ப்ளூ சட்டை மாறன் வெளுத்து வாங்கி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் பா ரஞ்சித். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் நட்சத்திரம் நகர்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தில் காளிதாஸ், கலையரசன், துஷாரா விஜயன், அசோக் செல்வன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இசையமைப்பாளர் டென்மா இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். ஒளிப்பதிவாளராக கிஷோர் குமார் இந்த படத்தில் பணியாற்றி இருக்கின்றார். படத்தில் கலையரசன் சினிமாவில் எப்படியாவது பெரிய ஹீரோ ஆகிவிட வேண்டும் என்ற கனவுடன் சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு புதுச்சேரிக்கு வருகிறார்.

- Advertisement -

நட்சத்திரம் நகர்கிறது படம்:

பின் அவர் அங்கு ஒரு வருகிறார். குழு ஒன்றில் இணைந்து நடிப்பு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அப்போது குழுவில் உள்ள நபர்களுடன் கரையரசனுக்கு கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இருந்தாலும், கரையரசன் தொடர்ந்து நாடகங்களில் நடித்து வருகிறார். திடீரென்று ஒரு நாள் நாடக குழு சார்பில் அரசியல் நாடகம் ஒன்று நடக்கிறது. இதற்கிடையே ரெனே- இனியன் இருவரும் காதலித்து வருகிறார்கள். திடீரென்று அவர்களுடைய காதல் பிரேக் அப் ஆகிறது.

படத்தின் கதை:

இப்படி பல கிளை கதைகளாக நட்சத்திரம் நகர்கிறது படம் சென்று கொண்டிருக்கின்றது. இறுதியில் கரையரசனின் அரசியல் நாடகம் நடத்தப்பட்டதா? கரையரசனுக்கு என்ன ஆனது? ரெனே-இனியன் காதல் என்ன ஆனது? என்பது தான் படத்தின் மீதி கதை. படத்தில் காதலுக்கு பாலின வேதங்கள், ஜாதி மதங்கள், எல்லாம் கிடையாது என்பதை அழகாக காண்பித்திருக்கிறார் இயக்குனர். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்:

இந்த நிலையில் நட்சத்திரம் நகர்கிறது படம் குறித்த ப்ளூ சட்டை மாறன் விமர்சித்திருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் அவர், டிரைலரை பார்த்த உடனே படம் என்னவென்று தெரிந்து விட்டது. சமீப காலமாகவே இயக்குனர்கள் தங்களுடைய படங்களில் அவர்களுடைய ஜாதிகளை உயர்த்தியும், பிற ஜாதிகளை தாழ்த்தியும் படமெடுத்து வருவதை ட்ரெண்டிங் ஆக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் நாடக காதல் தவறானது என்று ஒரு இயக்குனர் எடுத்திருந்தார். இதை இயக்குனர் பா ரஞ்சித் தன்னுடைய படத்தில் காதல் என்றால் பொதுவானது என்று காண்பிக்கும் முயற்சியில் ஏதோ ஒன்று செய்திருக்கிறார்.

பா.ரஞ்சித் குறித்து கூறியது:

படத்தை முழுவதையே நாடக காதலில் காண்பிக்கிறேன் என்று ஒரு நாடகம் ஆக எடுத்து இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் ரஞ்சித் படம் என்றாலே ஜாதி, அரசியல் பற்றி ஏதாவது ஒரு சர்ச்சை கிளம்பும். அதில் எந்த ஒரு ஐயமும் இல்லை. ஆனால், இந்த படத்தில் அதையும் தாண்டி ஆண் ஆணை காதலிக்கலாம், பெண் பெண்ணை காதலிக்கலாம். ஒருத்தருக்கு ஒருத்தி என்ற கட்டாயம் இல்லை போன்ற பல விவாதங்களை வைத்திருக்கிறார் என்று படத்தை ப்ளூ சட்டை மாறன் வழக்கம் போல தன்னுடைய பாணியில் வெளுத்து வாங்கி இருக்கிறார்.

Advertisement