ப்ளூ ஸ்டார் படத்தில் புல்லட் பாபுவாக கலக்கிய இவர் யார் – தமிழ் சினிமாவில் இந்த நடிகரை சந்திக்க வேண்டும் என்பது தான் ஆசையாம்.

0
340
- Advertisement -

ப்ளூ ஸ்டார் படத்தில் புல்லட் பாபு என்ற கதாபாத்திரத்தின் மூலம் பலரை கவர்ந்த நடிகர் அளித்து இருக்கும் பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர் அசோக் செல்வன். தற்போது இவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ப்ளூ ஸ்டார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் எஸ் ஜெயக்குமார் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை பா ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், பகவதி பெருமாள் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

கோவிந்த் வசந்த் இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து இயக்குனர் கதைக்களத்தை கொடுத்திருக்கிறார். ஊர் தெரு மற்றும் காலனி தெரு மக்களுக்கு இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டியும் அதனால் ஏற்படும் பிரச்சனை குறித்து தான் படத்தில் பேசப்பட்டிருக்கிறது. அதோடு ஊர் தெரு மற்றும் காலனி தெரு மக்கள் இணைந்தால் என்ன நடக்கும்? என்பதையும் இயக்குனர் படத்தில் காண்பித்திருக்கிறார்.

- Advertisement -

படத்தின் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை இயல்பான காட்சிகளே தான் இருக்கிறது. நகைச்சுவையும் படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது.இந்த படத்தில் சிறிது நேரமே வந்தாலும் பெரும் பில்ட்டப்புடன் வந்து ரசிகர்களை கவர்ந்தது புல்லட் பாபு என்ற கதாபாத்திரம். அவர் மலையாள நடிகரான  நடிகர் சஜு நவோதயா தான்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர் ‘ புல்லட் பாபு கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வேண்டியது யோகி பாபு தான். ஆனால், அவரது கால்ஷீட் பிரச்சினைகளால் அவரால் நடிக்க முடியவில்லை. அதன் பின்னர்தான் இந்த படத்தின் வாய்ப்பு எனக்கு கிடைத்திருத்தது. மலையாளத்தில் எத்தனையோ படங்களில் நான் நடித்திருந்தாலும் இப்படி ஒரு மாஸ் என்ட்ரி எனக்கு அமையவில்லை.

-விளம்பரம்-

என்னுடைய கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பு எண்ணி நான் மகிழ்ச்சி அடைகிறேன். சின்னத்திரையில் இருந்து தான் நான் சினிமாவிற்கு வந்தேன் இளம் ரசிகர்களை விட எனக்கு ஃபேமிலி ஆடியன்ஸ்கள் ஆதரவு அதிகம் கிடைத்துவிடும். நேற்று தான் கேரளாவில் படத்தை பார்த்தேன் அங்கே தமிழ் ரசிகர்கள் பலரும் என்னை அடையாளம் கண்டு என்னை வாழ்த்தினார்கள்.படத்தில் நான் பேசிய வசனங்களுக்கு பின்னால் இருக்கும் அரசியல் குறித்து இயக்குனர் என்னிடம் சொன்னார்.

அதேபோல படத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியில் விளையாடுவது புல்லட் பாபாவின் லட்சியமாக இருக்கும். ஆனால் உண்மையில் எனக்கு வெஸ்ட் இண்டீஸ் அணியின் லாரா தான் பிடிக்கும். அதன் பின்னர் தான் கிரிஸ் கெயில் படிக்கும் என்றும் கூறியிருக்கிறார். தமிழ் சினிமாவில் எனக்கு விஜய் அஜித் ரஜினிகாந்த் என்று பலரை பிடிக்கும் எல்லா மொழி படங்களையும் நான் பார்ப்பேன் குறிப்பாக தமிழில் சமுத்திரக்கனி படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் அவரை நேரில் பார்த்து பேச வேண்டும் என்பது எனது ஆசை என்றும் பேசி இருக்கிறார்.

Advertisement