6 வயது மகனை இழந்த 2 மாதத்தில் நடிகரும் மரணம் – நண்பர்கள் உருக்கம். என்ன கொடுமையோ.

0
575
Shivkumar
- Advertisement -

பாலிவுட் நடிகர் ஷிவ் குமார் சுப்பிரமணியம் காலமான தகவல் தற்போது சோசியல் மீடியாவை வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே பாலிவுட் முதல் கோலிவுட் வரை என பல பிரபலங்கள் உடல்நலக்குறைவால் இறந்து உள்ளார்கள். அந்த வகையில் தற்போது பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்த ஷிவ் குமார் சுப்பிரமணியம் மரணித்து உள்ளார். இவர் மும்பையை சேர்ந்தவர். பாலிவுட் படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்தவர் ஷிவ் குமார் சுப்பிரமணியம். இவர் பாலிவுட்டில் மிக பிரபலமான பல முன்னணி நடிகர்களின் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

மேலும், ஷிவ் குமார் சுப்பிரமணியம் அவர்கள் 2 States, Hichki, Nail Polish, Rocky Handsome உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவர் கடைசியாக நெட்பிளிக்ஸ் வெளியாகிய மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்ற படத்தில் ஹீரோயினிக்கு அப்பாவாக நடித்திருந்தார். மேலும், இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் உதவி இயக்குனராகவும், திரைக்கதை ஆசிரியர் நிறைய படங்களில் பங்காற்றி உள்ளார். இவருடைய நடிப்புத் திறமைக்காக பல விருதுகளையும் வாங்கி இருக்கின்றனர்.

- Advertisement -

ஷிவ் குமார் திரைப்பயணம்:

அதிலும் 2 States படத்தில் ஆலியா பட்டுக்கு அப்பாவாக ஷிவ் குமார் நடித்திருந்தார். பின் Tu Hai Mera Sunday படத்தில் ஷிவ் குமார் நடித்து இருந்தார். இதில் எல்லாம் இவருடைய நடிப்பை பார்த்து பலராலும் பாராட்டி இருந்தார்கள். இந்நிலையில் ஷிவ் குமார் சுப்பிரமணியம் நேற்று இரவு உடல்நலக்குறைவால் காலமாகி உள்ளார். அதுமட்டுமில்லாமல் இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் இவரின் மகன் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.

ஷிவ் குமார் இறப்பு:

தற்போது இவரின் இழப்பு பாலிவுட்டில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், ஷிவ் குமார் சுப்பிரமணியம் இறந்த தகவல் சோசியல் மீடியாவில் வெளியானதை தொடர்ந்து பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை என பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் பீனா சர்வார் பதிவிட்டு உள்ள பதிவில், செய்தி கேள்விப்பட்டதும் தாங்கிக்கொள்ள முடியவில்லை, துக்கமானது.

-விளம்பரம்-

ஷிவ் குமார் மறைவுக்கு இரங்கல்:

இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் ஷிவ்குமார் -திவ்யா மகன் ஜஹான் இறந்தான். 16 -வது பிறந்தநாளுக்கு 2 வாரங்களுக்கு முன்பே அவனை மூளை புற்றுநோய் எடுத்துக் கொண்டது என ட்வீட் செய்து இருக்கிறார். இவரை தொடர்ந்து நடிகை Ayesha Raza Mishra பதிவில் கூறியிருப்பது, அமைதியாக இளைப்பாறுங்கள் ஷிவ். வேறு என்ன சொல்ல முடியும். வலி மறந்து ஓய்வெடுங்கள் நண்பரே என்று பதிவிட்டுள்ளார்.

ஷிவ் குமார் இறுதி சடங்கு:

இப்படி பாலிவுட் பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கலை நடிகர் ஷிவ் குமார் சுப்பிரமணியத்துக்கு செலுத்தி வருகிறார்கள். தற்போது இவருக்கு 69 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டும் இல்லாமல் இன்று காலை 10 மணிக்கு மும்பையில் அவருடைய இறுதிச்சடங்கு நடைபெற்றது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

Advertisement