மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் உடல் எடையை குறைத்திருக்கும் செய்திதான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்திய திரையுலகில் மாபெரும் நடிகையாக திகழ்ந்து வந்தார் ஸ்ரீதேவி. இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, மலையாளம், கண்டனம் என்று பல மொழி படங்களில் கொடிக்கட்டி பறந்தவர். இவர் 1969 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். அதன் பின் இவர் கமலஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் படங்களில் நடித்து இருந்தார்.

மேலும், திரையுலகில் கடைசி காலம் வரை இளமை மாறாமல் இருந்த ஸ்ரீதேவி இறப்பதற்கு இறுதி வரை தொடர்ந்து நடித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே நடிகை ஸ்ரீதேவி அவர்கள் பாலிவூட்டில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி மற்றும் குஷி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இவரைப் போலவே இவருடைய மகள் ஜான்வி கபூரும் பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். மேலும், யாரும் எதிர்பாராத வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு துபாயில் நடிகை ஸ்ரீதேவி காலமானார்.
ஸ்ரீதேவி மரணம்:
தன்னுடைய உறவினருடைய திருமணத்தில் கலந்து கொள்வதற்காக தான் ஸ்ரீதேவி தன்னுடைய குடும்பத்துடன் துபாய் சென்றிருந்தார். அங்கு இவர் பாத் டப்பில் குளித்துக் கொண்டிருக்கும் போதே நீரில் மூழ்கி இறந்திருக்கிறார் என்று போலீசார் தெரிவித்திருந்தார்கள். இவரின் மறைவு இந்திய திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் மத்தியில் பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அவரது மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி இருந்தது. அதில் ஸ்ரீதேவி மரணம் இயற்கையானது என்று தகவல்கள் வெளியாகின.

ஸ்ரீதேவி பயோபிக்:
மேலும், ஸ்ரீதேவியின் மரணத்திற்கு பிறகு அவருடைய வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்படுவது குறித்த பேச்சு வார்த்தைகள் அடிக்கடி சோசியல் மீடியாவில் உலா வந்து கொண்டிருந்தது. ஆனால், இது தொடர்பாக ஒரு பேட்டியில் பேசிய போனி கபூர், ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாற்றுப் படம் குறித்து நிறைய செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. ஸ்ரீதேவி உயிருடன் இருக்கும் வரை தனிப்பட்ட நபராகவே இருந்தார். பிரைவேசி முக்கியம் என்று நினைப்பவர். அதனால் அவருடைய வாழ்க்கை தனிப்பட்டதாக இருக்கட்டும். நான் உயிருடன் இருக்கும் வரை ஸ்ரீதேவி பயோபிக் படத்தை எடுக்க அனுமதிக்கப் போவதில்லை என்று கூறியிருந்தார்.
போனி கபூர் குறித்து:
இந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான தயாரிப்பாளராக இருப்பவர் போனி கபூர். இவர் பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து இருக்கிறார். இவர் நடிகை ஸ்ரீதேவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும், போனி கபூர் அவர்கள் அஜித் நடிப்பில் வெளியாகியிருந்த 'நேர்கொண்ட பார்வை' என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியிருந்தார். அதைத்தொடர்ந்து தமிழில் கூட அவர் சில படங்கள் தயாரித்திருக்கிறார். எப்போதும் போனி கபூர் அவர்கள் கொஞ்சம் எடை கூடியவாறு தான் காணப்படுவார். ஆனால், தற்போது அவர் திடீரென தனது உடல் எடையை குறைத்து இருக்கிறார். எனவே சமூக வலைதளங்களில் அவர் அவரது மனைவி ஸ்ரீதேவியை மிஸ் செய்வதால் தான் அவரின் உடல் எடை குறைந்து இருக்கிறது என்று கூறி வந்தார்கள்.
View this post on Instagram
உடல் எடையை குறைத்த போனி:
சமீபத்தில் இது குறித்து விளக்கம் அளித்த அவர், நான் இப்போது உடல் எடை குறைத்து டிரான்ஸ்பார்ம் ஆனதால் மட்டும் என் மனைவி ஸ்ரீதேவியை மிஸ் செய்யவில்லை. அவரை நான் ஒவ்வொரு நொடியும் மிஸ் செய்கிறேன். எல்லா மனைவிகளும் விரும்புவது போல் ஸ்ரீதேவி நானும் ஹெல்த் கான்சியஸாக இருக்க வேண்டும் என்று நினைத்தார். அவர் நான் உடல் எடையை குறைக்க வேண்டும், தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று நினைத்தார். ஸ்ரீதேவி என் புகை பிடிக்கும் பழக்கத்தை வெறுத்தார். அவருக்காக நான் மூன்று முறை புகைபிடிப்பதை நிறுத்தினேன். முதலில் அவரை திருமணம் செய்த போது. எங்கள் திருமணத்திற்கு பிறகு நான் 12 வருடங்கள் புகை பிடிக்கவில்லை. அதற்குப் பிறகு சில மனஅழுத்தம் காரணமாக மீண்டும் புகை பிடிக்க ஆரம்பித்தேன். மீண்டும் அவர் 2018 பிப்ரவரியில் மறைந்தார் என்றால் அதற்கு ஒரு ஆறு மாதங்களுக்கு முன்பே நான் புகைப்பிடிப்பதை நிறுத்திவிட்டேன் என்று கூறியிருக்கிறார்.






