சமீபத்தில் வெளியான ‘வலிமை’ பட போஸ்டரை பகிர்ந்த ஸ்ரீதேவி மகள் ஜான்வியின் மகள் பகிர்ந்த பதிவு மிகுந்த கேலிக்கு உள்ளாகியுள்ளது.விஸ்வாசம் படத்தை தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்துள்ளார் நடிகர் அஜித். நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து அதே டீம் தற்போது இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளது. இந்த படத்தின் பணிகள் துவங்கி ஓராண்டுக்கு மேல் ஆன நிலையில் படத்தின் பெயரை தவிர வேறு எந்த ஒரு அப்டேட்டும் இது நாள் வரை வரவில்லை. நீண்ட மாதமாக வலிமை அப்டேட் வராததால் அஜித் ரசிகர்கள் யாரை பார்த்தாலும் வலிமை அப்டேட்டை கேட்க ஆரம்பித்தனர்.

கடந்த மே 1 ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால், கொரோனா பிரச்சனை காரணமாக அதுவும் தள்ளிப்போனது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் 25 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது யாரும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக நேற்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது.

இதையும் பாருங்க : பாதி படத்தில் நடித்துவிட்டு வெளியேறிய ஹீரோ, ரஜினி படத்திற்காக வாய்ப்பை இழந்த விஜய் பட நடிகை.

Advertisement

ஆனால், இந்த போஸ்டர் ஏதோ Fan made போல உள்ளது என்றும் இந்த போஸ்டருக்கு இரண்டு வருடங்களாக பில்ட் அப் கொடுத்தார்களா என்றெல்லாம் பலரும் கேலி செய்து வருகின்றனர். அதே போல இந்த படத்தின் போஸ்டரை பிகில், தசாவதாரம் துவங்கி அக்சய் குமார் நடிப்பில் வெளியான கிராக் படத்தின் போஸ்டர்களுடனும் இந்த படத்தின் போஸ்டரை ஒப்பிட்டு கலாய்த்து வருகின்றனர்.

இந்த படத்தின் மோஷன் போஸ்டரை பல்வேறு பிரபலங்களும் படக்குழுவினரும் தங்களது சமூக வலைத்தகத்தில் பதிவிட்டு இருந்தனர். அந்த வகையில் இந்த படத்தின் தயாரிப்பாளரான போனி கபூரின் மகள் ஜான்வி ஜான்வியும் இந்த படத்தின் மோஷன் போஸ்டருக்கான லிங்கை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

Advertisement

ஆனால், வலிமை என்று குறிப்பிடுவதற்கு பதிலாக ‘Valamai’ என்று பதிவிட்டு இருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஜான்வியை கேலி செய்து வருகின்றனர். சரக்குல இருந்தீங்களா , ஒரு தடவ மோஷன் போஸ்டர பார்த்திருந்த வலிமைனு ஸ்பெல்லிங் தெரிஞ்சிச்சிருக்கும் என்றெல்லாம் கேலி செய்து வருகின்றனர்

Advertisement
Advertisement