பாதி படத்தில் நடித்துவிட்டு வெளியேறிய ஹீரோ, ரஜினி படத்திற்காக வாய்ப்பை இழந்த விஜய் பட நடிகை.

0
2945
kadhal
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் பல்வேறு ஹிட் படங்கள் வந்திருக்கின்றது. அதில் ஒரு சில நடிகர்கள் தவறவிட்ட படத்தில் கூட அஜித் நடித்துள்ளார். அந்த வகையில் அஜித் நடிப்பில் சூப்பர் ஹிட் படமாக இன்று வரை கருதக் கூடிய படங்களில் “காதல் கோட்டை ” படமும் உண்டு.1996 ஆம் ஆண்டு இயக்குனர் அகத்தியன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அஜித், தேவயானி, ஹீரா போன்றவர்கள் நடித்திருப்பார்கள். அஜித்திற்கு நல்ல திருப்புமுனை படமாக அமைந்த இந்த படத்தில் முதன் முதலில் கோலங்கள் சீரியலில் தேவயானி கணவராக நடித்த அபிஷேக் என்பவர் தான் நடிக்கவிருந்தாராம்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-89-1024x576.jpg

நடிகர் அபிஷேக், கோலங்கள் சீரியலில் பாஸ்கர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பரிட்சியமானார். ஆனால், அதற்கு முன்னாள் பல படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் தான் ‘காதல் கோட்டை’ படத்தில் முதன் முதலில் நடித்து வந்தாராம் . கிட்ட தட்ட பாதி படம் முடிந்த நிலையில் சில பல பிரச்சனைகளால் அபிஷேக், படத்தில் இருந்து விலகி விட்டாராம்.

- Advertisement -

அதனால், இந்த படத்தை நடிகர் அஜித்தை வைத்து இயக்குனர் அகத்தியன் மீண்டும் புதிதாக எடுத்து வெளியிட, படம் ஏகோபித்த ஹிட் அடைந்தது. அதே போல இந்த படத்தில் அஜித்தின் ஜோடியாக தேவயானி நடித்திருப்பார். ஆனால், அவருக்கு பதிலாக இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை அஞ்சு அரவிந்த் தானாம். இவர் விஜய் நடித்த பூவே உனக்காக படத்தில் விஜய்யின் ஒன் சைட் லவ்வராக நடித்திருப்பார்.

கோட்டை படத்தில் அஜித்தின் ஜோடியாக முதலில் நடிக்க வேண்டியது அஞ்சு அரவிந்த் தான். அந்த சமயத்தில் அருணாச்சலம் படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் காதல் கோட்டை பட வாய்ப்பை கைவிட்டுள்ளார் அஞ்சு அரவிந்த். இந்த நிலையில் இந்த படம் வெளையாகி இன்றோடு 25 ஆண்டுகள் நிறைவு செய்ததை காதல் கோட்டைபடக் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement