ஜான்வி கபூரின் வருங்கால கணவருக்கு கண்டிஷன் போட்ட போனி கபூர். என்ன தெரியுமா ?

0
358
jhanvikapoor
- Advertisement -

ஜான்வி கபூரின் வருங்கால கணவருக்கு போனிகபூர் போட்ட கண்டிசன் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முடி சூடா நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் திரைப்படத் துறையில் மிகப் புகழ் பெற்ற நடிகை. இவர் 1969 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி 2018 ஆம் ஆண்டு வரை சினிமா உலகில் பயணத்தார். இவர் கமலஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் படங்களில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி திரைப் படங்களிலும் நடித்து இருந்தார். இதுவரை இவர் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இவர் கலை துறையில் ஆற்றிய பணிக்காக பல்வேறு விருதுகளை வாங்கி இருக்கிறார். பின் நடிகை ஸ்ரீ தேவி அவர்கள் பாலிவூட்டில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி மற்றும் குஷி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். நடிகை ஸ்ரீதேவி திடீரென்று மாரடைப்பால் இறந்து விட்டார்.

- Advertisement -

ஜான்வி கபூர் திரைப்பயணம்:

இவரது மரணம் இந்திய சினிமாவை சோகத்தில் ஆழ்த்தியதோடு பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இவரைப் போலவே இவருடைய மகள் ஜான்வி கபூரும் பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஜான்வி கபூர் ஹிந்தியில் ‘தடக்’ என்ற படத்தின் மூலம் இந்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இவர் கூடிய விரைவில் தமிழ் சினிமாவுக்கும், தெலுங்கு சினிமாவுக்கும் வரப்போவதாகக் கூறப்படுகிறது.

கோலமாவு கோகிலா:

இவர் நெட்ஃப்ளிக்ஸ் படத்திலும் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த படம் கோலமாவு கோகிலா. இந்த படத்தில் நயன்தாரா, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், ஜாக்லின் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. தற்போது இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

குட் லக் ஜெர்ரி:

இந்த படத்தை இந்தியில் சித்தார்த் சென் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் நடித்து இருக்கிறார். “குட் லக் ஜெர்ரி” என்ற பெயரில் இந்த படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை லைகா புரோடக்சன் நிறுவனத்துடன் இணைந்து ஆனந்த் எல் ராயின் கலர் எல்லோ புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இதனை அடுத்து ஜான்வி இரண்டு பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

வருங்கால மாப்பிளைக்கு போனிகபூர் போட்ட கண்டிசன்

இந்த நிலையில் ஜான்வி கபூரின் வருங்கால கணவர் குறித்து போனிகபூர் போட்ட கண்டிசன் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது ஜான்வி கபூருக்கு 25 வயதாகிறது. மாப்பிள்ளை தன்னை விட உயரமாக இருக்க வேண்டும் என்றும் 6.1 உயரம் உடையவர் தான் தன்னுடைய மாப்பிளையாக இருக்க வேண்டும் போனி கபூர் கூறி இருக்கிறார். இந்த விஷயத்தை ஜான்வி கபூர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது கூறியிருக்கிறார்.

Advertisement