உதவிகள் செய்த தகன மையத்திலேயே அடக்கம் செய்யப்படும் போஸ் வெங்கட் சகோதரர் – இவருக்கு இப்படி ஒரு முகமா?

0
1951
- Advertisement -

நடிகர் போஸ் வெங்கட்டின் சகோதரர்- சகோதரி இறந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் போஸ் வெங்கட். இவர் நடிகர் மட்டுமில்லாமல் திரைப்பட இயக்குனர், திமுக தலைமை கழக பேச்சாளர், இயக்குனர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். மேலும், இவர் 2003 ஆம் ஆண்டு மீடியாவிற்குள் நுழைந்து தற்போது வரை படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-
Bosevenkat

இவர் வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் தொலைக்காட்சியிலும் பல நாடகங்களில் நடித்திருக்கிறார்.
அதிலும் சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார். இந்த சீரியலில் போஸ் என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்து இருந்தார். இதன் மூலம் தான் இவருக்கு போஸ் வெங்கட் என்ற பெயரே வந்தது என்று சொல்லலாம். மேலும், இந்த சீரியல் மூலம் இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைத்தது.

- Advertisement -

போஸ் வெங்கட் திரைப்பயணம்:

இவர் பெரும்பாலும் படங்களில் குணச்சித்திர, வில்லன் கதாபாத்திரத்திலும் தான் நடித்து இருக்கிறார். பின் போஸ் அவர்கள் 2020ஆம் ஆண்டு வெளிவந்த கன்னிமாடம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அடியெடுத்து வைத்திருந்தார். இந்த படம் முழுக்க முழுக்க போஸ் அவர்களின் பக்கத்து வீட்டுக்காரரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இதனை அடுத்து இவர் படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

போஸ் வெங்கட் குடும்பம்:

இந்நிலையில் போஸ் வெங்கட்டின் சகோதரர்- சகோதரி இறந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, போஸ் வெங்கட்டின் தந்தை பெயர் ஜெயராமன். இவர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள பாண்டிபத்திரம் என்னும் கிராமத்தை சேர்ந்தவர். இவருக்கு மூன்று பிள்ளைகள். வளர்மதி என்ற மகளும், ரங்கநாதன், போஸ் வெங்கட் என்ற இரு மகன்களும் உள்ளனர். இதில் போஸ் வெங்கடின் சகோதரி வளர்மதி குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார். சில தினங்களுக்கு முன் போஸ் வெங்கட்டின் சகோதரி வளர்மதிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்து இருக்கிறார்.

-விளம்பரம்-

போஸ் வெங்கட் சகோதரர்-சகோதரி இறப்பு:

இந்த சம்பவம் அறிந்த போஸ் வெங்கடின் சகோதரர் ரங்கநாதன் தன்னுடைய சகோதரியின் உடலை பார்த்து கதறி அழுது இருக்கிறார். உடனே அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்து இருக்கிறார். மயங்கி விழுந்த சிறிது நேரத்திலேயே அவரும் இறந்துவிட்டார். ரங்கநாதன் அறந்தாங்கியில் காப்பீடு சம்பந்தமாக தொழில் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வளர்மதியின் இறுதி சடங்குகள் செய்யப்பட்ட நிலையில் அவருடைய சகோதரர் ரங்கநாதனின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட்டிருக்கிறது.

ரங்கநாதன் செய்த உதவி:

சில மணி நேரத்திலேயே சகோதரர்- சகோதரி இறந்த செய்தி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், ரங்கநாதன் அறந்தாங்கியில் அறக்கட்டளை மூலம் பல சமூக சேவைகளை செய்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அறந்தாங்கியில் ஜீவன் ஆலயம் எனும் மின்தகன எரிவாயு மையத்திற்கு தேவையான உதவிகளையும் அவர் செய்து கொடுத்திருக்கிறார். தற்போது அதே தகன மையத்தில் அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது போஸ் வெங்கட் வீட்டில் நிகழ்ந்த துக்க சம்பவம் சோசியல் மீடியாவில் வெளியானதை தொடர்ந்து பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement