முதல்வர் ஸ்டாலின் வாழ்க்கையை படமாக எடுக்க தயாராகும் மெட்டி ஒலி சீரியல் பிரபலம் (கடைசியா இவர் எடுத்த படம் நல்லா தான் இருந்துச்சி)

0
478
Stalin
- Advertisement -

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயக்க இருப்பதாக நடிகரும், இயக்குனருமான போஸ் வெங்கட் அறிவித்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் போஸ் வெங்கட். இவர் நடிகர் மட்டுமில்லாமல் திரைப்பட இயக்குனர், திமுக தலைமை கழக பேச்சாளர் ஆவார். மேலும், இவர் 2003 ஆம் ஆண்டு மீடியாவிற்குள் நுழைந்து தற்போது வரை படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் தொலைக்காட்சியிலும் பல நாடகங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

அதிலும் சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார். இந்த சீரியலில் போஸ் என்ற கதாபாத்திரத்தில் இவர் கலக்கியிருப்பார். இதன் மூலம் தான் இவருக்கு போஸ் வெங்கட் என்ற பெயரே வந்தது என்று சொல்லலாம். மேலும், இந்த சீரியல் மூலம் இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைத்தது. இவர் பெரும்பாலும் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், வில்லன் கதாபாத்திரத்திலும் தான் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

கன்னிமாடம் படம் பற்றிய தகவல்:

பின் போஸ் அவர்கள் 2020ஆம் ஆண்டு வெளிவந்த கன்னிமாடம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அடியெடுத்து வைத்திருந்தார். சென்னையில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கும் போது போஸ் வாழ்க்கையில் நடந்த மற்றும் எதிர்கொண்ட உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது தான் இந்த படத்தின் கதை. இது முழுக்க முழுக்க போஸ் அவர்களின் பக்கத்து வீட்டுக்காரரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது. சாண்டில்யனின் கன்னி மாடம் ‘என்ற சரித்திர நாவலில் இருந்து தான் இந்த படத்தின் தலைப்பு வைக்கப்பட்டது.

கன்னிமாடம் படத்தில் இருந்த நடிகர்கள்:

ஸ்ரீராம் மற்றும் காயத்ரி இந்த படத்தின் மூலம் கதாநாயகன், கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார்கள். இவர்களுடன் ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், வலீனா பிரின்சஸ், விஷ்ணு ராமசாமி, சூப்பர் குட் சுப்பிரமணி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். ரூபி பிலிம்ஸ் சார்பாக இப்படத்தை ஹஷிர் தயாரித்து இருந்தார். ஹரிஷ் சாய் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார். ஹரிஷ் J இனியன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருந்தார். மேலும், இந்த படத்தில் நடிகர் ரோபோ சங்கர் அவர்கள் ‘மூணு காலு வாகனம்’ என்ற பாடலை பாடி அசத்தி இருந்தார்.

-விளம்பரம்-

போஸ் வெங்கட் இயக்கும் படம்:

இந்த நிலையில் போஸ் வெங்கட் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. கன்னிமாடம் படத்தைத் தொடர்ந்து போஸ் வெங்கட் அவர்கள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க இருக்கிறார். 2024 ஆம் ஆண்டு தேர்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாகுகிறது. இந்த திரைப்படத்தில் மு.க.ஸ்டாலின் மிசா காலகட்டத்தில் உள்ளாக்கப்பட்ட நெருக்கடிகளை மையமாக வைத்தும், ஒரு தலைவனாக மு.க.ஸ்டாலின் உருவாக காரணமாக இருந்த நிகழ்வுகளையும் கொண்ட படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

புது படம் குறித்த தகவல்:

மேலும், படத்தின் கதை எழுதும் பணிகளை அஜயன் பாலா மேற்கொண்டு இருக்கிறார். அதோடு மு.க.ஸ்டாலினின் ஒப்புதலுக்காக படக்குழு காத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்துக்கு இசை அமைக்கும் பணிகளை ஏ.ஆர்.ரகுமான் மேற்கொள்ள இருக்கிறார். இவர்களுடன் சமுத்திரகனி இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், இந்த படம் குறித்த தகவல்கள் கூடிய விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Advertisement