தமிழ் சினிமா உலகில் சிவா மனசுல சக்தி திரைப்படத்தின் இயக்குனர் ராஜேஷின் இரண்டாவது படம் தான் பாஸ் என்கிற பாஸ்கரன். இது 2010 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் நகைச்சுவை திரைப்படம் ஆகும். இந்த படத்தில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். மேலும், இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது.

இந்நிலையில் இந்த படத்தில் கண்ணு தெரியாத ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை அன்னபூரணி. இந்த படத்தில் கண்ணு தெரியாதவராக இருந்தாலும் ஒரு வேலை செய்து கொண்டு விடாமுயற்சியுடன் போராடும் பெண்ணின் நிலையை பார்த்து ஆர்யா மனம் மாறுவார். பின் தான் நடத்தும் டுடோரியல் காலேஜ்க்கு அவரையே ஆசிரியராகவும் கொண்டுவருவார். நடிகை அன்னபூரணி அவர்கள் மதுரையில் பிறந்தவர்.

இதையும் பாருங்க : அண்ணாமலை, ஜோடி no.1 புகழ் குட்டி பூஜாவ ஞாபகம் இருக்கா – அவருக்கு இவ்ளோ பெரிய மகள்களா.

Advertisement

இவர் சின்னத்திரையில் சன் டிவி, வசந்த் டிவி, விஜய் டிவி, கேப்டன், ராஜ் டிவி என பல சேனல்களில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்துள்ளார். இவர் பல ஆண்டுகாலமாக சின்னத்திரையில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அவ்வப்போது வெள்ளித்திரையில் கிடைக்கும் வாய்ப்புகளில் இவர் நடித்துள்ளார். இவர் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை தொடர்ந்து வணக்கம் மாப்பிள்ளை என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நடிகை அன்னபூரணி ராமானுஜர் என்ற தொடரின் மூலம் தான் சின்னத் திரைக்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் மாமா மாப்பிள்ளை, பாசமலர், சொந்த பந்தம், மோகினி, தேவதை, மரகத வீனை, வள்ளி, கல்யாண வீடு, பொம்முக்குட்டி அம்மாவுக்கு போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். தற்போது இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் இதயத்தை திருடாதே சீரியலில் கதாநாயகியின் அண்ணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Advertisement
Advertisement