சின்னத்திரை சீரியல் நடிகை குட்டி பூஜாவை உங்களுக்கு ஞாபகம் இருக்கா??? வாங்க சீரியல் நடிகை குட்டி பூஜா இப்ப என்ன பண்றாங்கன்னு? அவங்கள பத்தி பார்க்கலாம். குட்டி பூஜா 2002 ஆம் ஆண்டு சன் டிவியில் ஓளிபரப்பான ‘அண்ணாமலை’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆனவர். இவரின் முதல் சீரியலிலேயே மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும், பூஜாவை அதிகம் ‘குட்டி பூஜா’ என்று தான் அனைவரும் அழைப்பார்கள். ஏன்னா, நடிகை பூஜா சின்னத் திரை சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது பயங்கர சேட்டையும், குறும்புத்தனமும் செய்வாராம்.
இதனால் தான் இவருக்கு குட்டி பூஜா என்றும் பெயர் வைத்தார்களாம். இதனைத் தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.பின் இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பரவலாக பேசப்பட்டார். உண்மையிலேயே குட்டி பூஜாவுக்கு நடனம் என்பதே தெரியாதாம். ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியின் மூலம் தன் நடனத்தை கற்றுக் கொண்டார் என்றும் கூறினார்.
அதுமட்டும் இல்லாமல் அந்த நடன நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரும் நம்ம குட்டி பூஜா தான். பூஜா நடித்த பல்வேரு தொடர்கள் மாபெரும் ஹிட் தான். இவர்களுக்கு தற்போது இரண்டு இளவரசிகள் இருக்கிறார்கள். மேலும்,முதல் குழந்தைக்கு 10 வயதாகிறது. இரண்டாவது குழந்தைக்கு மூன்று வயது ஆகிறது. அதோடு முதல் பெண்ணுக்கு நீச்சல்,படம் வரைத்ததில் அதிக ஆர்வம் உடையவராம்.
அதுமட்டுமில்லாமல் அவளுக்கு இப்போது இருந்தே நடிப்பின் மீது அதிக ஆர்வம் இருக்கிறது என்றும் மேலும்,அவள் விருப்பப்பட்டால் சினிமாவில் நடிக்க நாங்கள் அனுமதிப்போம் என்றும் குட்டி பூஜா கூறியிருந்தார். இதுமட்டும் இல்லாமல் குட்டி பூஜா டிவியில் ஓளிபரப்பாகும் தொடர்களில் நடிக்க வில்லை என்றாலும் கனடாவில் ஒரு டிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாகவும், வி.ஜே.வாகவும் பணிபுரிந்து வருகிறார்.
இவர் சீரியல்களில் நடிக்க வில்லை என்றாலும் கனடாவிலிருந்து தமிழ் சீரியல்கள் எல்லாம் பார்ப்பதாகவும் கூறியுள்ளார். தற்போது கணவர் மற்றும் குழந்தைகளுடன் செட்டில் ஆகி இருக்கும் இவர் மீண்டும் சின்னத்திரைக்கு வந்தால் ஒரு ரவுண்டு வருவார் என்பதில் மட்டும் கண்டிப்பாக எந்த சந்தேகமும் இல்லை.