இந்து கடவுளை இழிவுபடுத்தி, லவ் ஜிஹாத்தை சொல்வதாக ‘அத்ரங்கி ரே ‘ படத்திற்கு குவியும் எதிர்புகள். காரணம் இந்த காட்சிகள் தானாம்.

0
401
dhanush
- Advertisement -

சமீபத்தில் அக்ஷய் குமார் மற்றும் தனுஷ் நடிப்பில் வெளியான ‘ அத்ரங்கி ரே ‘ படத்திற்கு எதிராக நெட்டிசன்கள் கொந்தளித்து இருக்கின்றனர். தமிழ் நடிகர்களில் ஒரு சில நடிகர்களுக்கு மட்டுமே தான் பாலிவுட், ஹாலிவுட் வாய்ப்பு கிடைக்கும். அதிலும் பெரும்பாலும் பாலிவுட் நடிகர்கள் தான் ஹாலிவுட்டில் கால்தடம் பதித்து வந்தனர். தமிழ் சினிமாவை பொறுத்த வரை ரஜினி, நொபொலீயன் என்று ஒரு சிலர் மட்டுமே கால்பதித்து இருந்தனர். ஆனால், இளைய தலைமுறை நடிகர்களில் யாரும் ஹாலிவுட் படத்தில் நடித்தது இல்லை.

-விளம்பரம்-

பாலிவுட்டிலும் கலக்கும் தனுஷ் :

அந்த குறையை தீர்த்தவர் நடிகர் தனுஷ் தான். தமிழில் பல படங்களில் தனது அசுரத்தனமான நடிப்பை நிரூபித்தவர் தனுஷ். இவர் கோலிவுட்டில் மட்டுமில்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என பல மொழிகளில் அசத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் வெளியான ‘ராஞ்சனா’ படத்தின் மூலம் பாலிவுட்டில் கால் பதித்தார்.

- Advertisement -

பாலிவுட்டிலும் வெற்றி படங்களை கொடுத்த தனுஷ் :

அந்த படம் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அக்ஷரா ஹாசனுடன் இணைந்து பால்கி இயக்கத்தில் இணைந்து தனுஷ் ‘ஷமிதாப்’ படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் நடிகர் தனுஷ் வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த படமும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்திற்கு பின்னர் தனுஷ் பாலிவுட்டில் பயங்கர பிரபலமானார்.

‘அத்ரங்கி ரே ‘ – கலாட்டா கல்யாணம் :

இந்நிலையில் 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ‘அத்ரங்கி ரே ‘ படத்தின் மூலம் தனுஷ் பாலிவுட்டில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழில் ‘கலாட்டா கல்யாணம்’ என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 24 ஆம் தேதி வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தில் அக்ஷய்குமார், சாரா அலி கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். தனுஷின் இரண்டாவது நேரடி ஓடிடி வெளியீடாக அத்ரங்கி ரே இந்திப் படம் டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வெளியானது.  இந்தப் படம் முதல்நாளில் டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வெளியான எந்தப் படத்தையும்விட அதிக பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.தமிழில் இந்த படம் ‘கலாட்டா கல்யாணம்’ என்ற பெயரில் வெளியாகி உள்ளது.

ட்ரெண்டிங்கில் வந்த Boycott AtrangiRe :

இப்படி ஒரு நிலையில் இந்த படம் லவ் ஜிகாத் ஊக்குவிக்கும் வகையில் இருக்கிறது, ஹிந்துக்களை மோசமனாவர்களாக காட்டுகிறது என சொல்லி எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. மேலும் ஹிந்து கடவுள்களை அவமானப்படுத்தும் வகையில் காட்சிகள் இருக்கிறது என்றும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதனால் ட்விட்டரில் #Boycott_Atrangi_Re என்ற ஹாஸ் டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Advertisement