விபச்சார வழக்கில் சிக்கி தனக்கு ஏற்பட்ட மோசமான நிலையை குறித்து நடிகை புவனேஸ்வரி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக இருந்தவர் புவனேஸ்வரி. இவர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். அது மட்டும் இல்லாமல் இவர் ஒரு மாடலும் ஆவார்.

இவர் 2000 ஆண்டு பிரபு, எஸ் வி சேகர், வடிவேலு, ரோஜா, கோவை சரளா நடிப்பில் வெளியாகியிருந்த கந்தா கடம்பா கதிர்வேலா என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார். அதற்கு பிறகு இவர் தமிழ், தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். அதிகம் இவர் தெலுங்கில் நடித்திருக்கிறார்.

Advertisement

புவனேஸ்வரி குறித்த தகவல்:

மேலும், இவர் கவர்ச்சி கதாபாத்திரத்தில் கூட நடித்திருக்கிறார். இவருடைய கண், சிரிப்பு தான் இவருக்கு பிளஸ் என்று சொல்லலாம். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி, ராஜராஜேஸ்வரி, ஒரு கை ஓசை, பாசமலர் போன்ற பல தொடர்களில் நடித்திருந்தார்.

புவனேஸ்வரி கைது:

கடைசியாக இவர் தமிழில் சந்திரலேகா என்ற சீரியலில் நடித்து இருந்தார். அதற்கு பிறகு இவர் எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. பெரும்பாலும் இவர் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறார். இதனுடைய இவர் 2009 ஆம் ஆண்டு விபச்சாரத்தில் ஈடுபட்டதாக போலீசார் கைது செய்து இருந்தார்கள் அதற்குப் பிறகு இவர் வெளியே வந்தார்.

Advertisement

புவனேஸ்வரி பேட்டி:

தற்போது இவர் முழுக்க முழுக்க தெலுங்கு திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில்
சமீபத்தில் தன்னுடைய வாழ்க்கையில் அனுபவித்த மோசமான அனுபவங்களை குறித்து பேட்டியில் புவனேஸ்வரி கூறியிருப்பது, எனக்கு நடிகை சரோஜாதேவி என்றால் ரொம்ப பிடிக்கும். சினிமாவில் அவரைப் போலவே சிறப்பான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதேபோல் பல படங்கள் வாய்ப்பு கிடைத்தது

Advertisement

விபச்சார வழக்கு குறித்து சொன்னது:

அப்படியே நான் அரசியலில் கவனம் செலுத்தி வந்தேன். ஆனால்,சிலர் சதி செய்து என்னை விபச்சார வழக்கில் சிக்க வைத்தார்கள். இதை பொய் என்று நிரூபித்து அந்த வழக்கிலிருந்து நான் விடுதலை ஆனேன். அதற்குப் பின் என்னுடைய வாழ்க்கை மாறிவிட்டது. தற்போது நான் என்னுடைய குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கிறேன். அது மட்டும் இல்லாமல் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன்.

Advertisement