இரவின் நிழல் படத்தில் அரை நிர்வாண காட்சியில் நடித்ததுள்ள பிரகிடா, வைரலாகும் புகைப்படம் ? - மனம் திறந்த பவி டீச்சர் பிரகிடா.

By subhashini · 13/7/2022

இரவின் நிழல் படத்தில் நிர்வாண காட்சியில் நடித்தது குறித்து பிரிகிடா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர் நடிகர் பார்த்திபன். அந்த வகையில் தற்போது பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் இரவின் நிழல். இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு உள்ளது. இதில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருக்கின்றனர்.

இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்து இருக்கிறார். மேலும், இந்த படத்தை இயக்குவது மட்டுமில்லாமல் பார்த்திபன் நடித்தும் இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘விக்டோரியா’ என்னும் ஜெர்மானிய திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு இருந்தது. அது ஆஸ்கர் விருதின் இறுதி பட்டியல் வரை சென்றிருந்தது. தற்போது பார்த்திபனும் அந்த முயற்சியில் இறங்கி இருக்கிறார். அகிரா புரோடக்சன் இந்த படத்தை தயாரித்துள்ளது.

இதையும் பாருங்க : சிங்கம் மீசையுடன் கோர்ட்டுக்கு வந்த காவலர் - மீசையை பார்த்து கடுப்பாகி நீதிபதி போட்ட உத்தரவு.

இரவின் நிழல் படம்:

இந்த படம் ஜூலை 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை சமீபத்தில் பார்த்த நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பார்த்திபனின் அசாதாரண முயற்சியை வியந்து பாராட்டி இருக்கிறார். ஏற்கனவே இரவின் நிழல் படத்திற்கு சர்வதேச விருதுகள் குவிந்து வருகின்றது. இதையடுத்து பிரபலங்கள் பலரும் பார்த்திபனின் முயற்சியை பாராட்டி வருகின்றனர். மேலும், இந்த படத்தில் பிரிகிடா தெலுங்கு மொழி பேசும் கதாபாத்திரத்தில் பிரகிடா நடித்து இருப்பார்.

பிரிகிடா பற்றிய தகவல்:

இவர் ஆஹா கல்யாணம் வெப்சீரிஸில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இந்த படத்தில் இவர் தான் மெயின் லீடாக நடித்திருக்கிறார். இவர் இந்த படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிய சென்றார். ஆனால், இவருக்கு ஹீரோயினி வாய்ப்பு வழங்கிவிட்டார் பார்த்திபன். இந்த படத்தில் முழு முயற்சியும் போட்டு நடித்திருக்கிறார் பிரிகிடா. 19 நொடிகளில் ஓடிக்கொண்டே ஆடையை மாற்றி நடிக்க வேண்டிய சூழல்.

பிரிகிடா அளித்த பேட்டி:

நிர்வாண காட்சியில் பிரிகிடா நடித்தது பலரையும் வியப்படைய செய்து இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் ஒட்டு துணி இல்லாமல் நிர்வாண கோலத்தில் நடித்தது குறித்து பிரிகிடா கூறி இருந்தது, சேலை அணிந்து சென்றால் சரியாக இருக்கிறதா? என பலமுறை சரிசெய்யும் பெண் தான் நான். ஆனால், அந்த கதாபாத்திரம் ரொம்ப புனிதமானது. அதற்கு அப்படி ஒரு விஷயம் நடக்கும் போது அந்த கோலத்தில் இருந்தால் தான் சரியாக இருக்கும் என பார்த்திபன் சார் புரியவைத்தார். ஆனால், இதை என் பெற்றோர்களிடம் எப்படி சொல்வது என்பது எனக்கு ஒரு பெரிய நெருடலாக இருந்தது.

வீடியோவில் 8 : 12 நிமிடத்தில் பார்க்கவும்

https://www.youtube.com/watch?v=bw5NXd8B92Y&t=493s

நிர்வாண காட்சி குறித்து பிரிகிடா சொன்னது:

எனது கதாபாத்திரம் பற்றி எல்லாம் எடுத்துக் கூறி விட்டு இப்படி ஒரு சீனும் இருக்கு. அது இருந்தால் தான் அந்த கதாபாத்திரத்திற்கு வலிமை சேர்க்கும் என்று என் பெற்றோரிடம் எடுத்துக் கூறி இருந்தார் பார்த்திபன் சார். பின் அவர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் அந்த காட்சியை எடுத்து முடித்தோம். படத்தில் இந்த காட்சி நிச்சயம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். கவர்ச்சியாகவே இருக்காது. அங்கே புனித மட்டுமே தெரியும். இந்த படம் எனக்கு இத்தனை சீக்கிரம் கிடைத்தது மிகப்பெரிய வாய்ப்பு என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full