சிங்கம் மீசையுடன் கோர்ட்டுக்கு வந்த காவலர் – மீசையை பார்த்து கடுப்பாகி நீதிபதி போட்ட உத்தரவு.

0
805
- Advertisement -

சிங்கம் சூர்யா பாணியில் மீசை வைத்திருந்த போலீசை நீதிபதி கண்டித்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் நடிகர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது. அந்த வகையில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் சிங்கம்.

-விளம்பரம்-

இந்த படத்தில் சூர்யா, அனுஷ்கா செட்டி, விவேக், பிரகாஷ் ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக மிரட்டி இருப்பார். இந்தப் படம் மிகப் பெரிய அளவில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி இருந்தது. மேலும், இந்தப் படத்தின் கதை எந்த அளவிற்குப் பிரபலமோ அதே போல் சூர்யாவின் மீசையும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக வரவேற்கப்பட்டது.

- Advertisement -

இதையும் பாருங்க : ஒரு சூப்பர் சிங்கர் பிரபலம், லிஸ்டில் 2 முன்னாள் போட்டியாளர்களின் கணவர்கள் – சுட சுட பிக் பாஸ் அப்டேட் இதோ.

சிங்கம் சூர்யா பாணியில் மீசை:

சிங்கம் படம் வந்த போது பல பேர் சூர்யாவைப் போலவே மீசை வைத்து சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி இருந்தார்கள். அதிலும், போலீஸ் அதிகாரிகள் பலரும் சிங்கம் சூர்யாவை போலவே மீசை வளர்த்து இருந்தார்கள். அந்த வகையில் சிங்கம் சூர்யா போல் ராஜேஷ் கண்ணன் என்ற போலீஸ் மீசை வைத்திருந்தார். இவர் கூடலூரை அடுத்துள்ள அம்பலமூலா பகுதியை சேர்ந்தவர். அங்குள்ள காவல் நிலையத்தில் காவலராக ராஜேஷ் கண்ணன் பணிபுரிகிறார்.

-விளம்பரம்-

நீதிபதி போட்ட உத்தரவு:

இந்த நிலையில் வழக்கு ஒன்றில் விசாரணைக்காக நீலகிரி மாவட்ட அமர்வு முன் காவலர் ராஜேஷ் கண்ணன் ஆஜராகி இருக்கிறார். அப்போது அவரை கண்ட நீதிபதி முருகன் கூறியிருந்தது, இதுபோல் மீசை வைக்க உயர் அதிகாரிகளிடம் முறையாக தகவல் தெரிவித்து இருக்கிறீர்களா? அப்படி தகவல் தெரிவிக்கவில்லை என்றால் மீசையை திருத்தம் செய்யுமாறு நீதிபதி அவரைக் கண்டித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தார் காவலர் ராஜேஷ் கண்ணன்.

ராஜேஷ் கண்ணன் செய்த செயல்:

பின் அவர் நீதிமன்றத்தை விட்டு வெளியே சென்று சலூன் கடையில் மீசையை முறையாக வெட்டி சரி செய்து விட்டு நீதிமன்றம் வந்தார். இதன் காரணம் நீலகிரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டு இருந்தது. இதனை அடுத்து காவல் உயரதிகாரி கூறி இருப்பது, சிங்கம் படம் வெளியான பிறகு போலீசார் பலர் அதை தங்களுக்கு முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு தடாலடியான நடவடிக்கையில் இறங்குவது, மீசையை அவரை போன்று வைத்துக் கொள்வதையும் வாடிக்கையாக கொண்டார்கள். படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆகியும் இந்த முறை இன்னும் மாறவில்லை.

காவல் உயரதிகாரி கூறி இருப்பது:

ஊருக்கு ஒரு காவலர் சிங்கம் சூர்யாவைப் போல் கடா மீசை வைத்துக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. காவல்துறையில் உள்ள காவலர்கள், அதிகாரிகளின் தோற்றம் அடையாள அட்டையில் இருப்பதைப் போன்றே இருக்க வேண்டும். அதற்கு மாறாக போலீசார் மொட்டை அடிப்பதோ, பெரிய மீசை வைப்பதாக இருந்தால் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என காவல் உயரதிகாரி தெரிவிக்கிறார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement