தேவாவுக்கு தேசிய விருது கிடைக்காதது பற்றி பாடகரும், தேவாவின் சகோதரரும் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அறிமுக இயக்குனர் ஜூன் மோசஸ் எழுதி இயக்கி இருக்கும் படம் பேய் கதை. இந்த படத்தில் வினோத் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஆர்யலட்சுமி, கானா அப்பிலோ, சுகன்யா, ஆஷ்மெலோ, செல்வா, எலிசபெத் சுராஜ், மைக்கேல், சுமந்த் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்த படம் ஆகஸ்ட் 29ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று இருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தேவாவின் சகோதரரும் பாடகருமான சபேஷ் விழாவில் கூறியது, தேவா சார் 400 படத்திற்கு மேல் இசை அமைத்திருக்கிறார். அவருடைய மகன் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு கூட விருது கிடைத்திருக்கிறது. தேவா சாருக்கு ஏன் தேசிய விருது கொடுக்கவில்லை என்று பலர் கேள்வி கேட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
தேவா தம்பி:
அவருக்கு விருது கிடைக்காதது வருத்தமாக தான் இருக்கிறது. நிறைய நல்ல பாடல்களை அவர் கொடுத்திருக்கிறார். தேவாவிற்கு காதல் கோட்டை படத்திற்கு தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும். அண்ணன் வாங்கவில்லை என்றால் என்ன, அப்பாவிற்கு பதில் மகன் ஸ்ரீகாந்த் தேவா வாங்கி இருக்கிறார்.
கானா என்றால் தேவா என்று சொல்வார்கள். ஒரு படத்திற்கு ஒரு கானா பாடல் தான் இருக்கும். மற்ற பாடல்கள் எல்லாம் மெலோடி தான் என்று கூறி இருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=VWTpDqwUvSo
தேசிய விருது:
வருடம் வருடம் இந்திய சினிமாவின் சிறந்த படைப்புகளை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசால் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. இதை முதன் முதலாக 1954 ஆம் ஆண்டு தான் தொடங்கி இருந்தார்கள். தற்போது 71 ஆவது தேசிய திரைப்பட விருது விழா நடைபெற இருக்கிறது. இன்று 71வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த தேர்வு பட்டியலில் 332 படங்கள் பரிசிலக்கப்பட்டு இருக்கிறது. 2023 ஆம் ஆண்டு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட படங்களுக்கு தான் இந்த விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

71வது தேசியவிருது:
இதில் சிறந்த நடிகராக ஜவான் படத்திற்காக ஷாருக்கான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 35 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்கும் நடிகர் ஷாருக்கானுக்கு இதுதான் முதல் முறைதேசிய விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிறந்த படமாக 12th பைல் படம் தேர்வு செய்யப்படுகிறது. சிறந்த நடிகையாக ராணி முகர்ஜி தேர்வாகி இருக்கிறார். மேலும், தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வாத்தி படத்தின் பாடலுக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை ஜி.வி பிரகாஷ் பெற்றிருக்கிறார். இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்தது வாத்தி படம் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர்கள் பட்டியல்:
மேலும், சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதை பார்க்கிங் படம் பிடித்து இருக்கிறது. அதோடு பார்க்கிங் படம் சிறந்த திரைக்கான விருதையும் பெற்றிருக்கிறது. பின் சிறந்த துணை நடிகருக்கான விருதையும் எம்.எஸ் பாஸ்கர் பெற்றிருக்கிறார். மொத்தம் மூன்று விருதுகளை பார்க்கிங் படம் பெற்று இருக்கிறது. அதன் பின் சிறந்த துணை நடிகர் பிரிவில் மலையாள நடிகர் விஜயராகவனுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. சிறந்த துணை நடிகை பிரிவில் ஊர்வசிக்கும் தேசிய விருது கொடுக்கப்பட்டிருக்கிறது.






