குறும்பட விழாவில் இயக்குனர் பேரரசுக்கும், பயில்வான் ரங்கநாதனுக்கும் இடையே நடந்த விவாதம் தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்பவர் பேரரசு. இவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்றுத் தந்தது. அதுமட்டுமில்லாமல் பேரரசு படங்கள் என்றாலே சண்டை, பாசம், நகைச்சுவை, அதிரடி வசனங்கள் என்று மசாலா திரைப்படமாக இருக்கும்.

சமீபகாலமாக இவருடைய படங்கள் வெளியாகாமல் இருக்கிறது. பின் பட விழாவில் ஆபாச வீடியோ பதிவிடும் பெண்களை கைது செய்ய வேண்டும் என்று இயக்குனர் பேரரசு பேசி இருந்தது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இயக்குனர் பேரரசுக்கும், நடிகர் பயில்வான் ரங்கநாதனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

ப்ளூ சட்டை என்ற குறும்பட விழா:

சமீபத்தில் ப்ளூ சட்டை என்ற குறும்பட விழா சென்னையில் நடந்தது. இந்த குறும்படத்தில் படங்களை கடுமையாக விமர்சனம் செய்பவர்களின் நாக்கை அறுப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கிறது. அதற்கு நடிகர் பயில்வான் ரங்கநாதன் கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தார். பின் கடுமையாக விமர்சிப்பது தவறு தான். இருந்தாலும், அதற்காக நாக்கை அறுப்பது போன்ற காட்சியை வைக்கலாமா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

எதிர்ப்பு தெரிவித்த இயக்குனர் பேரரசு:

இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குனர் பேரரசு கூறியிருப்பது, நான் சினிமா உலகில் நுழைந்த போது உதவி இயக்குனராக 10 வருடங்கள் கஷ்டப்பட்டு இருந்தேன். பின் இயக்குனராக ஐந்து வருடங்கள் ஆனது. மொத்தம் 15 வருடங்கள் ரொம்ப கஷ்டப்பட்டு இருந்தேன். என்னால் ஊருக்கு கூட போக முடியாது. பல சிரமங்களுக்கு பிறகு ஒரு படம் இயக்கி வெளிவரும்போது பிறர் கடுமையாக தாக்கி, தரக்குறைவாக எழுதி மனதை காயப்படுத்தினால் அந்த புது இயக்குனரின் மனம் என்ன பாடுபடும்.

Advertisement

விமர்சனம் செய்பவர்கள் குறித்து சொன்னது:

மேலும், ஒரு படத்தை கடுமையான சொற்களால் விமர்சனம் செய்து எழுதுபவர்கள் தங்கள் சொந்த காசில் படம் எடுக்க வேண்டும். பின் அந்த படத்தை பார்த்து விமர்சனம் எழுத வேண்டும். ஓசியில் படம் பார்த்து எழுதக் கூடாது என்று கூறியிருந்தார். இப்படி இயக்குனர் பேரரசு கூறியதை அடுத்து இருவருக்கும் இடையே விவாதம் ஏற்பட்டு இருந்தது.

Advertisement

இறுதியில் நிகழ்ச்சியில் நடந்தது:

இதனால் பட நிகழ்ச்சியின் நோக்கமே மாறி வேறு பாதையில் சென்றது. இதனையடுத்து ஜாகுவார் தங்கம் மேடையிலிருந்து இறங்கி வெளியேறினார். கடைசியில் ஒரு இக்கட்டான சூழலில் தான் ப்ளூ சட்டை பட விழா முடிவடைந்தது. இந்த படம் வந்த பிறகு என்னவெல்லாம் நடக்கப் போகிற? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement