கேப்டன் பிரபாகரன் படத்தின் வசூல் விவரம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே பிரபல நடிகர்களின் படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இதில் சில முன்னணி நடிகர்களின் படங்கள் ரீ ரிலீஸ் செய்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் விஜயகாந்தின் நூறாவது திரைப்படமான கேப்டன் பிரபாகரன் படத்தை ஆகஸ்ட் 22 ஆம் தேதி ரிலீஸ் செய்து இருந்தார்கள்.

கடந்த 1991 ஆம் ஆண்டு இயக்குனர் ஆர்.கே செல்வமணி இயக்கத்தில் வெளியான படம் தான் கேப்டன் பிரபாகரன். இந்த படத்தில் விஜயகாந்த், ரூபிணி, லிவிங்ஸ்டன், ரம்யா கிருஷ்னன், மன்சூர் அலிகான், சரத்குமார் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா தான் இசை அமைத்திருந்தார். இந்த படம் திரையரங்கில் 300 நாட்களுக்கும் மேல் ஓடி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
கேப்டன் பிரபாகரன் ரீ ரிலீஸ்:
தற்போது பல வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்கிறார்கள். மேலும், இந்த படம் 34 ஆண்டுகள் நிறைவு செய்திருப்பது ஒட்டி பிலிம்பில் எடுக்கப்பட்ட இந்த படத்தை டிஜிட்டல் தரத்திற்கு உயர்த்தப்பட்டு மீண்டும் படத்தை தமிழ்நாடு முழுவதும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. புதிய படத்தைப் போலவே ரசிகர்கள் ஆரவாரத்துடன் கேப்டன் பிரபாகரன் படத்தை கொண்டாடி தீர்த்திருக்கிறார்கள்.
https://www.youtube.com/watch?v=zyuNxh7bbms
படம் குறித்த தகவல்:
அதோடு நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்த்தை திரையில் பார்ப்பதால் ரசிகர்கள் ரொம்ப எமோஷனல் ஆகி இருக்கிறார்கள். மேலும், இந்த படத்தின் ரீ ரிலீசுக்கு சென்னை கமலா திரையரங்கிற்கு இயக்குனர் செல்வமணி, மன்சூர் அலிகான், விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன், பிரேமலதா விஜயகாந்த் எல்லோருமே படத்தை பார்த்து மகிழ்ந்து இருந்தார்கள். இந்த படம் ரீலீஸ் செய்யப்பட்டு நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. முதல் நாள் மட்டுமே இந்த படம் 42 லட்சத்தை வசூல் செய்திருக்கிறது.
https://www.youtube.com/watch?v=l4VbuPAbC6E
படத்தின் வசூல்:
இரண்டாவது நாள் 86 லட்சம் வசூல் செய்திருக்கிறது. ஆனால், மூன்றாவது நாள் 1.3 கோடியாக உயர்ந்திருக்கிறது. அதைத்தொடர்ந்து தற்போது ஏழாவது நாளில் 2.8 கோடி வரை வசூல் செய்து இருக்கிறது. இதுவரை கேப்டன் பிரபாகரன் படம் முதல் வாரத்தில் 12.04 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. இரண்டாம் வாரமும் இந்த படத்தினுடைய வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் பிரபாகரன் படத்தின் ரிலீஸ்க்கு முன்பு தான் ரஜினி உடைய கூலி படம் வெளியாகி இருந்தது. இருந்தோமே கேப்டன் பிரபாகரன் படத்தை ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி வருகிறார்கள் .






