பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வரலாற்றை திரித்துள்ளார் வழக்கறிஞர் ஒரு இயக்குனர் மணிரத்தினத்தை எதிர்த்து வழக்கு பதிவு செய்துள்ள விஷயம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது சினிமா துறை தமிழ் சினிமாவின் பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை தற்போது திரைப்படமாக இயக்குநர் மணிரத்னம் இயக்கி இருக்கிறார். இந்த கதையை பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்னம் தான் சாதித்து காட்டி இருக்கிறார்.

பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரை வாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், இந்த கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரகுமான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

Advertisement

பொன்னியின் செல்வன் படம்:

இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். அனைவரும் ஆவலுடன் எதிரிபார்த்து இருந்த பொன்னியின் செல்வன் படம் சமீபத்தில் தான் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. மேலும், தமிழ் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் உலக சினிமா ரசிகர்களும் பொன்னியின் செல்வன் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

மணிரத்தினம் மீது புகார் :

இருந்தாலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானதில் இருந்தே பல்வேறு பிரச்சனைகள் எழுந்து வருகிறது. அந்த வகையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இயக்குனர் மணிரத்தினம் மீது சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கை சென்னை அண்ணா நகரை சேர்ந்த சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Advertisement

வரலாற்றை திரித்துள்ளார் :

இவர் ஒரு வழக்கறிஞர், இவர் கொடுத்துள்ளார் எந்த மனுவில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் வரலாற்றை திரித்து உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் கதையின் முக்கிய கதாபாத்திரமான வந்தியத்தேவன் பெயரை இப்படத்தில் தவறாக பயன்படுத்தியுள்ளதாகவும், தன்னுடைய சுய லாபத்திற்காக வரலாற்றை தவறாக பயன்படுத்தி உள்ளனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

விசாரணைக்கு வரும் வழக்கு :

அதோடு ஒரு வரலாற்று படத்தை எடுக்கும் போது அதனை பற்றி உரிய முறையில் ஆராய்ச்சி செய்த பின்னரே எடுக்க வேண்டும் என்றும், கல்கி தன்னுடைய கதையில் உண்மையான பெயர்களை பயன்படுத்திய நிலையில் போர்தந்திரங்களில் சிறந்து விளங்கிய சோழர்களை அவமதிக்கும் வகையில் வரலாற்றை திரித்தாக மணிரத்தினம் மேல் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இந்த வழக்கை மத்திய அரசு மற்றும் இந்திய தொல்லியல் ஆய்வு துறையிடம் கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விரைவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

Advertisement