விஜய் தொலைக்காட்சியில் இதுவரை ஒளிபரப்பான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளிலேயே ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி தான் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வரும் 25 ஆம் தேதி துவங்க இருந்த நிலையில் தற்போது புதிய சிக்கல் வந்துள்ளது.

இந்தியில் 12 சீசன்களை கடந்த இந்த நிகழ்ச்சி தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு வருடங்களாக ஒளிபரப்பானது. இந்த இரன்டு சீசனையும் உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கினார். இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனும் தொடங்க உள்ளது. இரண்டு சீசனை போல இந்த சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்க இருக்கிறார்.

இதையும் பாருங்க : நேர்கொண்ட பார்வை முக்கிய நடிகரை விளாசிய சின்மயி.! யாரு? ஏன்னு பாருங்க.! 

Advertisement

இந்த நிகழ்ச்சி தொடர்பான இரண்டு ப்ரோமோ விடியோக்கள் வெளியான நிலையில் இன்று இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோவும் வெளியானது. இந்த நிகழ்ச்சி தொடங்க 5 நாட்களே உள்ள நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சிக்கு தடை கோரி நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழில் கடந்த ஆண்டுகளாக பிக் பாஸ் நிகழ்ச்சியை எண்டிமால் என்ற வெளிநாட்டு நிறுவனம் தான் இயக்கி வருகிறது. ஆனால், விரைவில் துவக்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தணிக்கை சான்று பெறப்படவில்லை என்று சுதன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Advertisement

எனவே, பிக் நிகழ்ச்சியை இந்தியன் பிராட்காஸ்ட் ஃபவுண்டேசனின் (IBF) தணிக்கை சான்று பெறாமல் ஒளிபரப்பக்கூடாது என்று பிக்பாஸ் 3 நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி வழக்கறிஞர் சுதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

Advertisement

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண்கள் கவர்ச்சியான உடை அணிவதாகவும், இந்த நிகழ்ச்சியில் இரட்டை அர்த்த வசனங்கள் மூலம் இளைஞர்கள் மற்றும் பார்வையாளர்கள் பாதிக்கபடுகின்றனர் என்றும் குற்றம்சாட்ட பட்டுள்ளது. எனவே, பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Advertisement