இந்திய நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை குறித்து இயக்குனர் மணிரத்னம், அனுராக் உட்பட 49 பேரும் பிரதமர் மோடிக்கு கடிதம்எழுதி இருந்தனர். இதனால் இவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகின்றது.இதனால் அதிர்ந்து போயுள்ளனர் திரையுலக பிரபலங்கள்,மக்கள்.நாட்டில் சிறுபான்மை மக்கள் மீது இஸ்லாமிய மக்கள் தாக்குதல் நடத்திக் கொண்டு வருகின்றனர். இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இயக்குநர் மணிரத்னம், அனுராக் காஷ்யப், கொங்கனா சென், அபர்ணா சென், ராமச்சந்திர குஹா,நடிகை ரேவதி உட்பட 49 பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்கள். இதனால் இவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவிட்டுள்ளது மிஜாப்பூர் நீதிமன்றம்.அந்த கடிதத்தில் அவர்கள் கூறியது, அரசை விமர்சிப்பது மட்டும் ஒருவர் தேச துரோகிகள் என கூறமுடியாது, ஒரு குடிமகன் உயிர் பயத்தில் சொந்த நாட்டில் வாழ்வது தவறானது என்று அவர்கள் அந்தக் கடிதத்தில் எழுதி இருந்தார்கள்.

மேலும், சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல், ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்தோடு நடத்தப்படும் வன்முறை கொடுமைகளையும் நிறுத்த வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் பிரதமருக்கு கோரிக்கை வைத்தார்கள். மேலும், நாட்டில் நடக்கும் கும்பல் படுகொலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடிதத்தில் கூறி இருந்தார்கள்.முஸ்லிம் தலித் மற்றும் சிறுபான்மை மக்கள் கூட்டம் கூட்டமாக தாக்கப்படுவதும் கொடுமைப்படுத்துவது உடனடியாக நிறுத்த வேண்டும் என அந்த கடிதத்தில் கூடியிருந்தார்கள். மேலும், அரசாங்கம் இந்தியா ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு. இங்கு மதம், இனம், ஜாதி இது எல்லாம் கடந்து தான் அனைவரும் குடிமக்கள் என்று கூறியது. நீங்கள் இந்த மாதிரி கொலைகள் செய்பவர்களுக்கு கண்டனம் தெரிவித்து இருக்கிறீர்கள்.

இதையும் பாருங்க : 10 வருடங்கள் நரக வேதனையை அனுபவித்தேன்.! ப்ரஜன் வாழ்வில் நடந்த சோகம்.!

Advertisement

ஆனால், இந்த மாதிரி கொலை செய்பவர்களை நீங்கள் தடுத்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் மீது புகார் அளிக்கும் வகையில் எழுதி இருந்தார்கள். நீங்கள் வார்த்தையில் மட்டும்தான் கூறி வருகிறார்களே தவிர செயலில் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என்று அரசுக்கு எதிராக கருத்துக்களை கூறியதுபோல் அவர்களுடைய வார்த்தைகள் இருந்தது. இதனால் இது குறித்து மிஜாப்பூர் நீதிமன்றம் இயக்குனர் மணிரத்தினம் உட்பட 49 பேர் மீதும் தேசத்துரோக வழக்கு பதிவு செய்து வருகின்றது. மேற்கு வங்கம், பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து சிறுபான்மை மக்கள் மீது மக்களை ஜெய் ஸ்ரீராம் என கோஷம் விடுங்கள் என்று கொடுமை செய்துகொண்டு வருகிறார்கள்.

இந்த மாதிரி இந்து மத அடிப்படைவாத அமைப்புகளே ஈடுபடுகின்றன என்ற குற்றச்சாட்டும் எழுப்பியுள்ளார்கள். இதுகுறித்து பிரதமர் ஆகிய நீங்கள்தான் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்கள். இந்த கடிதம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மிஜாப்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் பதிவு செய்தார். இந்த புகார் மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூரிய காந்த் மணிரத்தினம் உட்பட 49 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து பீகாரில் உள்ள சர்தார் காவல் நிலையத்தில் இவர்கள் 49 பேர் மீதும் எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில் 49 பேரும் தேசத்துரோக செயலில் ஈடு உள்ளார்கள் என்றும் குறிப்பிடதக்கது.

Advertisement

பிரதமரின் மரியாதையை கெடுக்கும் வகையிலும் நடந்து கொண்டதாகவும், தனித்தனி இயக்கங்களை ஊக்கு படுத்துவதற்கான செயலாக இருந்ததாகவும் குற்றசாட்டுகள் பதியப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தேச துரோக வழக்கு, பொதுநலத்துக்கு பங்கம் விளைவிக்கும் நோக்கில் நடந்து கொண்டது, மத உணர்வை காயப்படுத்தியது ,அமைதியை சீர்குலைத்தது என பல பிரிவுகளின் கீழ் அந்த 49 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement