10 வருடங்கள் நரக வேதனையை அனுபவித்தேன்.! ப்ரஜன் வாழ்வில் நடந்த சோகம்.!

0
147277
prajin
- Advertisement -

ப்ரஜின் அவர்கள் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியல் மூலம் மக்களின் மனதை கொள்ளையடித்தவர். இவர் சினிமா உலகில் முதலில் சன் மியூசிக்கில் வீடியோ ஜாக்கி ஆக அறிமுகமானார். பிறகு சினிமா துறையில் ஒரு கதாநாயகனாக வேண்டும் என்று ஆசையினால் நிறைய முயற்சிகள் செய்தார். அதுமட்டுமில்லாமல் இப்போதே நேஷனல் அவார்டு, பெஸ்ட் ஆக்டர் கான விருதுகள் வாங்குவதற்கான ஆடைகளை எல்லாம் முன்னாடி இப்பவே ரெடி பண்ணி வச்சிருக்காரு.அந்த அளவுக்கு சினிமா துறையின் மீது பல கனவுகளுடன் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார்.தன் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை குறித்து ப்ரஜின் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்தார்.

-விளம்பரம்-
Image result for sun music prajin

பேட்டியில் ப்ரஜின் கூறியது, முதலில் நான் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களில் தான் நடித்து வந்தேன். அதன் மூலம் வெள்ளித்திரையில் சில படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அது டிஸ்யும், பழைய வண்ணார்பேட்டை ஆகிய படங்களில் நடித்து உள்ளேன்.பழைய வண்ணார்பேட்டை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அந்த படம் 2016 ஆம் ஆண்டு திரையரங்குக்கு வர இருந்தது. ஆனால், திடீரென்று அப்போது முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் இறந்த செய்தி வந்ததும் தியேட்டர்களை மூடி விட்டார்கள். அப்போது அந்த படத்தை அப்படியே நிறுத்தி விட்டார்கள். அந்த படத்திற்காக நான் 6 வருஷம் கஷ்டப்பட்டு இருந்தேன்.அப்ப ரொம்ப கஷ்டமாக இருந்தது.பல வேதனைகள் அடைந்த பிறகு அப்புறம்தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னதம்பி சீரியலுக்கு வந்தேன்.

இதையும் பாருங்க : அசுரன் படம் எப்படி இருக்கு .! சுட சுட ட்விட்டர் விமர்சனம் இதோ.!

- Advertisement -

தற்போது திரையரங்கிற்கு வெளிவந்த ‘ நம்ம வீட்டு பிள்ளை’ இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் சொன்ன அனைத்து வார்த்தைகளும் உண்மைதான். ஒரு மனுஷன் முன்னாடி வரதுக்கு பல கஷ்டங்களையும், அவமானங்களையும் தாண்டி தான் வரணும் என்று அவர் கூறிய வார்த்தை 100% உண்மை. அந்த அளவிற்கு நானும் கஷ்டப்பட்டு இருக்கிறேன்.முதல்ல சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக இருந்த நிகழ்ச்சியில் நான் கெஸ்ட்டாக போயிருக்கிறேன்.மேலும், சிவகார்த்திகேயன் தன்னுடைய வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தனக்கான ஒரு ஸ்டைலையும், புதிய தோற்றத்தையும் உருவாக்கி குழந்தைகள் மனதில் அதிக இடம் பிடித்தார். அதன்மூலம் கொஞ்சம் கொஞ்சமாக சினிமா துறையில் நுழைந்து இந்த அளவிற்கு விஸ்வரூப வெற்றி அடைந்துள்ளார்.

Image result for sun music prajin

பத்து வருடம் எந்த ஒரு வேலை இல்லாம வீட்டிலேயேதான் இருந்தேன். சினிமா துறையில் எப்படியாவது நுழைந்து கதாநாயகனாக வேண்டும் என்று பல முயற்சிகள் செய்து கொண்டிருந்தேன். எந்த வேலையும் செய்யாமல் வீட்டில் இருக்கிறது ஒரு நரக வேதனை தெரியமா ?என்று கூறினார். மேலும் அந்த பத்து வருடங்களில் நிறைய ஆடிஷனில் கலந்து கொள்வேன், பல இயக்குனர்களை சந்தித்தேன். மேலும் மலையாளத்தில் கூட முயற்சி செய்து பார்த்தேன். எனக்கு அந்த அளவிற்கு பக்கபலமாக யாரும் இல்லை. அந்த பத்து வருஷத்துல பல பிரச்சனைகளை சந்தித்து ரொம்ப கஷ்டப்பட்டேன்.அந்தப் பத்து வருஷத்துல பண ரீதியாகவும், மனரீதியாகவும் ரொம்ப உடைந்து போன அப்ப என்னுடைய வைஃப் சாண்ட்ரா அவர்கள் தான் உறுதுணையாக இருந்தார்கள்.அவர் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்துக் கொண்டு குடும்பத்தையும் என்னையும் பார்த்துக்கொண்டிருந்தார்.மேலும், எங்களுக்கு இப்ப இரட்டை குழந்தை பிறந்திருக்கு என்று சந்தோஷமாக கூறினார்.

-விளம்பரம்-
Related image

ஒரு மனுஷனோட வாழ்க்கையில எப்பவுமே முதல் பாகம் ரொம்ப கஷ்டமாக இருக்கும்.அப்படி கஷ்டப்பட்டா மட்டும் தான் வாழ்க்கையின் இரண்டாவது பாகம் நல்லா இருக்கும். உதாரணத்திற்கு கிரிக்கெட் எடுத்தீங்க முதல் பகுதி ரொம்ப கஷ்டமாக போயிட்டு இருக்கோம் ஆனா இரண்டாம் பகுதியில் தான் வெற்றி யாருக்கு என்று உறுதியடையும். அந்த மாதிரி என் லைஃப்ல ரொம்ப கஷ்டப்பட்டு இருக்க தொலைக்காட்சியில் சின்னத்தம்பி சீரியல் மூலம் நடிகை நயன்தாரா- நிவின்பாலி ஆகியோருடன் மலையாள படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்தை இயக்குனர் சீனிவாசன் இயக்குகிறார். இந்த படம் காதல் மட்டும் அதிரடி படமாக இருக்கும் என்று தெரிவித்தார்.இந்த படம் குறித்த தகவல்கள் கூடிய விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று கூறினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement