ஐயப்பன் ராமசாமி பஞ்சாயத்து – TTF வாசன் மீது வழக்கு பதிவு ? ஏன் தெரியுமா ?

0
67
TTf
- Advertisement -

சமீப காலமாகி 2k கிட்ஸ் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு பைக் youtuberஆக பிரபலமானார் TTF வாசன். பைக்கில் இந்தியா முழுவதும் பயணிக்கும் அவர் அதனை எல்லாம் வீடியோவாக எடுத்து தனது youtube சேனலில் பதிவேற்றி வருகிறார். இப்படி ஒரு நிலையில் பிரபல யூடுயூப் சேனல் ஒன்று ttf வாசனை பேட்டி எடுக்க அழைத்து ஐயப்பன் ராமசாமியை வைத்து Ttf வசனிடன் கேள்விகளை கேட்கவிட்டனர். அப்போது விஜய்யுடன் உங்களை ஒப்பிடுகிறார்களே என்று கேட்டதற்கு, ஏன் விஜய்யுடன் என்னை ஒப்பிட கூடாதா என்று கேட்டார் வாசன். ஒருகட்டத்தில் ஐயப்பனின் கேள்விக்கு பதில் கூற முடியாமல் பேட்டியில் இருந்து விட்டால் போதும் என்று பாதியில் எழுந்து ஓடிவிட்டார்.

-விளம்பரம்-

இதனால் TTF வாசனை சமூக வலைதளத்தில் பலரும் கேலி செய்து வந்தனர். இதனை தொடர்ந்து வீடியோ வெளியிட்ட TTF வாசன் ‘நான் உலக சாதனை ஒன்றே செய்து இருக்கிறேன் அந்த சாதனையை பற்றி ஒரு வார்த்தை கேட்கவில்லை. ஆனால், அவர்களுடைய சேனல் நன்றாக வீவ்ஸ் செல்ல வேண்டும் என்று தொடர்ந்து சர்ச்சையான கேள்விகளை கேட்டார்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதிலை நான் சொன்னால் உடனே கேள்வியை மாத்திடுறானுங்க.ச்ச சில்ர மாதிரி இருக்கானுங்க. எத்தனையோ சேனலுக்கு பேட்டி கொடுத்து இருக்கிறேன். ஆனால், இப்படி ஒரு மோசமான அனுபவம் எனக்கு இருந்தது இல்லை’ என்று புலம்பி தள்ளி இருந்தார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் அய்யப்பன் ராமசாமி மற்றும் பிற யூடுயூப் சேனல்களை சேர்ந்த சிலர் பணம் வாங்கி கொண்டு மற்றவர்களை பற்றி அவதூறாக பேச ஒப்புக்குள்ளும் வீடியோ ஒன்று வைரலானது. மேலும், ஐயப்பன் ராமசாமி பெண்கள் குறித்தும் அந்த வீடியோவில் பேசியது சர்ச்சையானது. ஐயப்பன் ராமசாமியின் இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமான TTF வாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதில் கேவலம் பணத்துக்காக ஒருத்தரை பற்றி இழிவு படுத்தும் ஐயப்பன் ராமசாமிக்கு இனி மரியாதையே கிடையாது. வயசுக்கு கொடுக்கும் மரியாதையை அவர் இழந்து விட்டார். அவருக்கு ஆதரவாக இருக்கும் பெண்களையே சாப்ட்ருவாங்க என்று கேவலமாக பேசியுள்ளார். ஆனால் எந்த பெமினிசம் பேசும் ஒரு பெண் கூட அவருக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை. இதே வார்த்தையை நான் சொல்லி இருந்தால் உடனே வந்திருப்பார்கள்.

-விளம்பரம்-

இந்த மாதிரியான ஆட்களை விட்டுவிட்டு சின்ன சின்ன விதி மீறல்களுக்கு எல்லாம் என்னை போன்ற ஆட்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். ஒருத்தன் அமுல் பேபி போல இருந்தால் உடனே அவனை பாலோவ் செய்யாதீர்கள். ஒருத்தருடைய உழைப்பை பார்த்து அவரை பாலோவ் செய்தால் அது உதவியாக இருக்கும். ஐயப்பன் ராமசாமியோட இன்டர்வியூவில் போட்டிருந்த அதே சட்டையை போட்டுகொண்டு அவர் மீது வெறியோடு இருக்கிறேன். கையில் சிக்கினா மூஞ்சி, மொகரைய உடைப்பேன் அவ்வளோ வெறியில இருக்கேன் என்று ஆவேசமாக பேசி இருந்தார்.

TTF வாசனின் இந்த வீடியோவிற்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும் சிலரோ இது தான் சாக்குனு நீ நல்லவன் ஆக நினைக்காதே இருவரும் யோக்கியன் கிடையாது என்று கூறி வந்தனர். இப்படி ஒரு நிலையில் ttf வாசன் மீது கோவை காரமடை போலீசில் புகார் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து டிடிஎப் வாசன் அய்யப்பன் ராமசாமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளது.

Advertisement