‘ஒரு காலத்துல Six Pack வச்ச ஹீரோயின்டா இது’ – கேத்ரீன் தெரசாவின் லேட்டஸ்ட் லுக்கை கண்டு புலம்பும் ரசிகர்கள்.

0
444
cathreine
- Advertisement -

உடல் எடை கூடி கும்மென மாறிப்போயிருக்கும் மெட்ராஸ் பட நடிகையின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த படம் மெட்ராஸ். இந்த படத்தில் கார்த்திக், கேத்ரின் தெரசா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தை கே ஞானவேல் ஸ்டுடியோ க்ரீன் தயாரித்து மற்றும் விநியோகம் செய்து இருந்தது. மேலும், இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார்.

-விளம்பரம்-

இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருந்தது. இந்த படத்தின் மூலம்
பா. ரஞ்சித்தின் திரைப்பயணம் முற்றிலும் மாறியது என்றே சொல்லலாம். மேலும், இந்த படத்தில் ‘நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்கிறியா’ என்ற ஓரு டயலாக் மூலம் ஒட்டுமொத்த இளைஞர்களையும் தன்பக்கம் கட்டிப் போட்டவர் நடிகை கேத்ரின் தெரசா. இந்த ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் தான் கேத்ரின் தெரசா தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார்.

- Advertisement -

கேத்ரின் நடித்த படங்கள்:

அந்த படத்திற்கு பின்னர் இவர் கணிதன், கலகலப்பு-2, அருவம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து இருக்கிறார். இருந்தாலும் மெட்ராஸ் படத்தின் மூலம் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து இருந்தார். பின் இவர் திடீரென்று படங்களில் கவர்ச்சி கன்னியாக வலம் வர தொடங்கி இருந்தார். இதனால் இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் போலோ செய்தார்கள்.

கேத்ரின் திரைப்பயணம்:

மேலும், இவர் தமிழ் மொழி மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் அதிகம் பல படங்களில் கவர்ச்சியாகவே நடித்து இருந்தார். இதனாலே இவரது மார்க்கெட் குறைந்து விட்டது என்றே சொல்லலாம். பின் இவர் தமிழ், தெலுங்கு என இரு மொழி படங்களிலும் மாறி மாறி நடித்துக் கொண்டிருந்தார். கடைசியாக இவர் நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளிவந்து இருந்த வேர்ல்ட் ஃபேமஸ் லவர் படத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

உடல் எடை கூடி உள்ள கேத்ரின்:

இந்த படம் வெளிவந்து தோல்வியை தழுவியது என்று கூறப்படுகிறது. தற்போது நடிகை கேத்ரின் தெரேசா கைவசம் எந்த படமும் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நடிகை கேத்ரின் தெரேசாவின் புகைப்படம் சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், தற்போது கேத்ரின் தெரசா அவர்கள் உடல் எடை கொஞ்சம் கூடி கும்மென மாறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இதற்கு கலக்கலான போட்டோ ஷூட்டிங் நடத்தி இருக்கிறார்.

அதிர்ச்சியில் ரசிகர்கள்:

கருப்பு நிற ஆடையில் இவர் நடத்தியிருந்த போட்டோஸ் தற்போது சோசியல் மீடியவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷாக்காகி இது புது படம் கெட்டப்பா? உண்மையிலேயே இப்படி ஆயிட்டீங்களா? என்ன ஆச்சு? என்று கமெண்ட்களை குவித்து வருகிறார்கள். ஒரு சிலர் குச்சி இப்போ குண்டாகிடிச்சி என்று கேத்ரின் ஆடிய பாடலை வைத்தே கேலி செய்து வருகின்றனர்.

Advertisement