டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் சமீபகாலமாக சீரியல்களை விட ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு அதிக வரவேற்பு பெற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள்.

குறிப்பாக டான்ஸ் நிகழ்ச்சிகள் பல சேனல்களில் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று டான்ஸ் ஜோடி டான்ஸ். இந்த நிகழ்ச்சி சாமானியர்களை சாதனையாளர்களாக மாற்றும் நிகழ்ச்சி என்று சொல்லலாம். மேலும், இந்த நிகழ்ச்சியில் சினேகா, பாபா பாஸ்கர் மாஸ்டர், வரலக்ஷ்மி ஆகியோர் பங்கேற்று வருகிறார்கள். ஏற்கனவே இந்த நிகழ்ச்சி ஜீ தமிழில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.
டான்ஸ் ஜோடி டான்ஸ்:
இந்த நிகழ்ச்சி சீனியர், ஜூனியர் என்று இரு பிரிவுகளில் ஒளிபரப்பாகி வருகிறது. அதோடு இந்த நிகழ்ச்சியின் மூலம் பல பேருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்து இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த நிகழ்ச்சியின் புதிய சீசன் தொடங்கி இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் மீது புகார் எழுந்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது, சில தினங்களுக்கு முன்பு ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்ச்சியில் சிவன், முருகன், விநாயகர் போன்று கடவுள் வேடங்களை அணிந்து நடனம் ஆடி இருந்தார்கள். அப்போது நடனமாடிய சில ஜோடி ஆபாசமாக நடந்து கொண்டதோடு கடவுள் வேடத்தில் இருந்தவர்களையும் நடனமாட விட்டு இருந்தார்கள். இதனால் இந்து மக்களின் நம்பிக்கைகளை புண்படுத்தி இருப்பதாக கூறி இந்து முன்னணி அமைப்பு ட்விட்டரில் புகார் தெரிவித்திருந்தார்கள்.
மத்திய அமைச்சர் நடவடிக்கை:
அதோடு மத்திய அமைச்சர் எல். முருகனை டேக் செய்து, சேனல் மீது நடவடிக்கை எடுக்க கூறி புகார் அளித்து இருந்தார்கள். இதை அடுத்து மத்திய அமைச்சரும் உடனடியாக நடவடிக்கை எடுத்து இருக்கிறார். இந்து அமைப்பு புகார் அளித்த அரை மணி நேரத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் இருந்து ஜீ தமிழ் சேனலுக்கு நோட்டீஸ் பறந்து இருக்கிறது. அந்த நோட்டீஸ் இந்து முன்னணி அமைப்புக்கும் கிடைத்திருக்கிறது.

நோட்டீஸில் கூறியது:
பின் உடனே மத்திய அமைச்சருக்கு நன்றி தெரிவித்து இந்து முன்னணி அமைப்பினர்
பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்கள். அதோடு ஜீ தமிழ் சேனலுக்கு மத்திய அரசு அனுப்பிய நோட்டீஸில், கடந்த 12 ஆம் தேதி ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி கேபிள் டெலிவிஷன் விதிமுறைகளை மீறி இருப்பதாக புகார் வந்திருக்கிறது. எனவே இந்த நோட்டீஸ் கண்ட ஏழு நாட்களுக்குள் சேனல் தரப்பில் விளக்கம் தர வேண்டும். தவறும் பட்சத்தில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்று கூறி இருக்கிறார்கள். தற்போது இந்த விவகாரம் தான் இணையத்தில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது






