செத்திருப்பீங்க தலயால பொழச்சீங்க – ரசிகர் சொன்ன வார்த்தை, வலிமை படத்தில் நடித்த சைத்ராவின் வைரல் பதில்

0
746
chaitra
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக ஜொலித்து கொண்டிருப்பவர் தல அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று உள்ளது. அந்த வகையில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் சில தினங்களுக்கு முன் ரிலீசாகி இருக்கிறது. நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருக்கிறார். இதையும் போனிகபூரே தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் மேலும், இசை அமைத்து உள்ளார் மற்றும் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் அஜித் அவர்கள் அசிஸ்டன்ட் கமிஷனராக உள்ளார். படத்தில் சென்னையில் Satan Slave குழுவை சேர்ந்த இளைஞர்கள் பைக்கை வைத்து பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகின்றார்கள். இதை அஜித் கண்டுபிடித்து அந்த கூட்டத்தின் தலைவரை பிடிக்கிறார். இந்த குழுவில் அஜித்தின் தம்பியும் இருப்பது தெரிகிறது. இதையெல்லாம் அஜித் எப்படி சமாளித்து வருகிறார்? என்பது தான் படத்தின் கதை.

- Advertisement -

வலிமை படம் பற்றிய தகவல்:

மேலும், படம் முழுவதும் அஜித்தின் ஒவ்வொரு காட்சிகளும் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது. அஜித்துக்கு அடுத்து வில்லன் கதாபாத்திரத்தில் கார்த்திகேயா மிரட்டியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஆண்களுக்கு இணையாக ஆக்சன் காட்சிகளில் ஹீமா குரேஷி மாஸ் காட்டியிருக்கிறார். மேலும், வலிமை படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. கேரளாவில் முதல் நாள் வசூலில் விஜய்யின் மாஸ்டர் படத்தின் வசூல் சாதனையை முறியடித்து முந்தி இருக்கிறது வலிமை படம்.

வலிமை படத்தில் சைத்ரா ரெட்டி:

அதோடு ‘வலிமை’ படத்தை பார்த்து திரை பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை அஜித்துக்கும், வலிமை படக் குழுவினர்களுக்கும் தெரிவித்து வருகின்றனர். மேலும், இப்படத்தில் நடிகர் அஜித்துடன் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளார்கள். அந்த வகையில் இந்த படத்தில் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டியும் நடித்திருக்கிறார். வலிமை படத்தில் குற்றவாளிகளை பிடிக்கும் குற்றவியல் பிரிவு போலீசாரின் கண்ட்ரோல் ரூமில் பணிபுரியும் பெண்ணாக சைத்ரா ரெட்டி நடித்துள்ளார். அவரின் பெரும்பாலான காட்சிகள் அஜித் மற்றும் ஹீமா குரேஷி உடன் தான் இருந்தது.

-விளம்பரம்-

ரசிகர் கேட்ட கேள்விக்கு சைத்ரா அளித்த பதில்:

இந்த படத்தில் முக்கிய காட்சியில் ஒன்றில் சைத்ரா ரெட்டியை அஜித் காப்பாற்றுவது போன்ற காட்சி வந்திருக்கும். இந்நிலையில் இதுகுறித்து படம் பார்த்த ரசிகர் இன்ஸ்டாவில் பேசி இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, எங்க தல இருந்ததினால் நீங்கள் தப்பித்தீர்கள்? பொழைச்சுட்டீங்க என சொல்லி இருக்கிறார். இதற்கு ஜாலியாகவே சைத்ரா அளித்த பதில், அட ஆமாப்பா, ஜஸ்ட் மிஸ் என்று கூறியுள்ளார். இப்படி சைத்ரா ரெட்டி பதிவிட்டுள்ள பதில் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சைத்ரா ரெட்டி நடித்த சீரியல்கள்:

விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சைத்ரா ரெட்டி. அதன் பின் இவர் ஜீ தமிழில் யாரடி நீ மோகினி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து எல்லோருக்கும் பிடித்தமான வில்லியாக திகழ்ந்தவர். கொடூரமான வில்லியாக இருந்தாலும் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் சேர்ந்தது. சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகும் இவர் சீரியலில் அதிக அழகுடனும், பொலிவுடனும் நடித்து வருகிறார். யாரடி நீ மோகினி சீரியல் முடிந்த பிறகு தற்போது இவர் சன் டிவியில் கயல் என்ற சீரியலில் நடித்து வருகிறார். இதுவரை நெகட்டிவ் கதாபாத்திரத்தில் பார்த்த இவரை பாசிட்டிவ் கதாபாத்திரத்தில் பார்க்க புதிதாக இருக்கிறது.

Advertisement