மேலும், படத்திற்கான ஹீரோயின் மற்றும் துணை நடிகர்கள் ஆகியோர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. இதற்கான தேர்வு தற்போது நடந்து வருகிறது.
தளபதி விஜயுடன் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க விருப்பமுள்ள ஆண்கள் மட்டும் [email protected] என்ற இமெயில் ஐடிக்கு தங்கள் புகைப்படத்துடன் கூடிய விபரங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அப்படி அனுப்பும் பட்சத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அழைக்கப்படுவர். பின்னர் வைக்கப்படும் ஆடிசனில் தேர்வு செய்யப்பட்டு படத்தில் நடிக்க வைக்கப்படுவர். நடிக்கும் திறமையுள்ள ஆண்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.




